Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, மோசேக்குப் பின் இஸ்ரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. இவர் கானான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இஸ்ரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது ‘யோசுவா’ என்னும் இந்நூல்.


இந்நூலில் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், யோர்தான் ஆற்றைக் கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


முன்பு மோசேயின் மூலம் இஸ்ரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக்கருத்தாகும்.


நூலின் பிரிவுகள்


1. கானான் நாட்டைக் கைப்பற்றல் 1:1 - 12:24 அ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல் 1:1 - 18 ஆ) இஸ்ரயேலரின் வெற்றிகள் 2:1 - 11:23 இ) தோல்வியுற்ற மன்னர்களின் பெயர்கள் 12:1 - 23 2. நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல் 13:1 - 21:45 அ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி 13:1 - 33 ஆ) யோர்தானுக்குக் மேற்கே உள்ள பகுதி 14:1 - 19:51 இ) அடைக்கல நகர்கள் 20:1 - 9 ஈ) லேவியர்க்குரிய நகர்கள் 21:1 - 45 3. கிழக்கே குடியேறிய குலத்தார் 22:1 - 34 4. யோசுவாவின் இறுதி மொழிகள் 23:1 - 16செக்கேமில் 5. 5. உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 24:1 - 33



அதிகாரம் 1:1-18

கானானைக் கைப்பற்ற யோசுவாவுக்கு அழைப்பு


1ஆண்டவரின் ஊழியர் மோசே இறந்தபின், நூனின் மகனும் மோசேயின் உதவியாளருமாகிய யோசுவாவிடம் ஆண்டவர் பின்வருமாறு கூறினார்: 2“என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல். 3மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும் இடத்தை எல்லாம் உங்களுக்குக் கொடுப்பேன். 4பாலைநிலத்திலிருந்து இந்த லெபனோன் வரையிலும், யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி இத்தியர் நாடு முழுவதுமாகக் கதிரவன் மறையும் பெருங்கடல் வரையிலும் உங்கள் நிலமாக இருக்கும். 5உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன்.✠ 6வீறுகொள், துணிந்துநில். ஏனெனில், இம்மக்களின் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நாட்டை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்வாய்.✠ 7திடமும் உறுதியும் கொண்டு என் ஊழியன் மோசே கட்டளையிட்ட எல்லாச் சட்டங்களையும் கடைப்பிடிப்பதில் கவனமாயிரு. நீ அதனின்று வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே. அப்பொழுதுதான் நீசெல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய். 8இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம்எல்லாம் நலம் பெறுவாய்; வெற்றி காண்பாய். 9நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.


10யோசுவா மக்களின் மேற்பார்வையாளருக்குக் கட்டளையிட்டுக் கூறியது: 11“பாளையத்தின் நடுவே சென்று இவ்வாறு மக்களுக்குரிய கட்டளையாகக் கூறுங்கள்: ‘உங்களுக்கு வேண்டிய உணவைத் தயார் செய்யுங்கள். ஏனெனில், இன்னும் மூன்று நாள்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் உடைமையாக உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இந்த யோர்தானைக் கடப்பீர்கள்.’”


12ரூபன், காத்தின் மக்களுக்கும், மனாசேயின் அரைக் குலத்திற்கும் யோசுவா கூறியது: 13“உங்களுக்கு ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டதை நினைவுகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அமைதி அருள்வார். இந்நாட்டை உங்களுக்கு அளிப்பார். 14உங்கள் மனைவியரும், குழந்தைகளும், கால்நடைகளும், மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம். ஆனால், வலிமைமிக்க நீங்கள் படைக்கலம் தாங்கிய போர் வீரர்களாக உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு உதவுங்கள். 15ஆண்டவர் உங்களுக்குச் செய்ததுபோல் உங்கள் சகோதரர்களையும் அந்நாட்டில் குடியேற்றி அவர்களுக்கும் அமைதி அருள்வார். அதுவரை அவர்களுக்கு உதவுங்கள். அவர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர். பின்னர், கதிரவன் உதிப்பதும், கடவுளின் ஊழியர் மோசே உங்களுக்கு அளித்ததும், நீங்கள் ஏற்கெனவே உடைமையாக்கிக் கொண்டதுமான கீழையோர்தானுக்குத் திரும்பிவந்து அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.”


16அவர்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குக் கட்டளை இடுவதை நாங்கள் செய்வோம். நீர் அனுப்பும் இடத்திற்கெல்லாம் நாங்கள் செல்வோம். 17நாங்கள் மோசேக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்ததுபோல் உமக்கும் கீழ்ப்படிவோம். உம் கடவுளாகிய ஆண்டவர் மோசேயுடன் இருந்ததுபோல் உம்மோடும் இருப்பாராக. 18உம் வாய் மொழியை எதிர்ப்பவன் எவனும், நீர் எங்களுக்குக் கட்டளை இடுபவை அனைத்திற்கும் செவிகொடுக்காதவன் எவனும் கொல்லப்பட வேண்டும். வீறுகொண்டு துணிந்து நிற்பீராக” என்றனர்.


1:3-5 இச 11:24-25. 1:5 இச 31:6,8; எபி 13:5. 1:6 இச 31:6,7,23. 1:12-15 எண் 32:28-32; இச 3:18-20; யோசு 22:1-6.



அதிகாரம் 2:1-24

யோசுவாவின் ஒற்றர்களும் இராகாபும்


1நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், “நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்” என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர்.✠ 2சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது. 3உடனே அவன், “உன் வீட்டுக்கு வந்து உன்னோடு தங்கியிருக்கும் ஆள்களை வெளியே கொண்டுவா. ஏனெனில், அவர்கள் நாடு முழுவதையும் உளவறிய வந்துள்ளனர்” என்று இராகாபிடம் சொல்லுமாறு ஆள் அனுப்பினான். 4அப்பெண் அவ்விருவரையும் அழைத்து ஒளித்துவைத்தபின், “சில மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. 5இருட்டியபின் வாயில் கதவு சாத்தப்படும்பொழுது அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. விரைவாக அவர்களைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்” என்றார்.6அவர் அவர்களை மாடியில் ஏற்றி அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்தார். 7அந்த ஆள்கள் யோர்தானுக்குச் செல்லும் வழியில் ஆற்றந்துறைவரை அவர்களைத் தேடிச் சென்றனர். தேடி வந்தவர்கள் வெளியேறியதும் வாயிற்கதவு மூடப்பட்டது.


8அவரோ, மாடியில் இருந்த ஒற்றர்கள் உறங்குமுன் அவர்களிடம் சென்றார். 9அவர்களிடம் அவர், “இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில், உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது. உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர். 10எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள்.✠ 11அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது. உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள். 12நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று இப்பொழுது எனக்கு ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளியுங்கள். நம்பத் தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள். 13என் தாய், தந்தை, என் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான குடும்பங்கள் அனைத்தையும் வாழவிடுங்கள். சாவிலிருந்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்றார். 14அதற்கு அந்த ஒற்றர்கள், “எங்கள் உயிர் உம்கையில் உள்ளது. எங்களைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தால் ஆண்டவர் எங்களுக்கு நாட்டை அளிக்கும்போது நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவோம். நம்பிக்கையுடன் நடந்துகொள்வோம்” என்றனர். 15அவர் ஒரு கயிற்றின்மூலம் அவர்களைச் சாளரம் வழியாக இறக்கிவிட்டார். ஏனெனில், அவரது வீடு கோட்டைச் சுவரோடு இணைந்திருந்தது. அங்கே அவர் வாழ்ந்து வந்தார்.


16அவர் அவர்களிடம், “உங்களைத் துரத்துபவர்கள் கண்டுபிடிக்காதபடி நீங்கள் மலையை நோக்கிப் போங்கள். துரத்துபவர்கள் திரும்பும்வரை அங்கே மூன்று நாள்கள் ஒளிந்து கொள்ளுங்கள். பின்னர், உங்கள் வழியே செல்லுங்கள்” என்றார். 17அப்பொழுது ஒற்றர்கள், “நீர் எங்களிடமிருந்து பெற்ற வாக்குறுதியிலிருந்து நாங்கள் தவற மாட்டோம். 18நாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும். உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும். 19உம் வீட்டிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள். ஆனால், உம்மோடு வீட்டிலிருப்பவர் மீது எவராவது கை வைத்தால் அந்த இரத்தப்பழி எங்கள் தலைமீது விழும். 20நமக்குள் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையை நீர் வெளிப்படுத்தினால், எங்களிடமிருந்து நீர் பெற்ற வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல” என்றனர். 21அவர், “உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் வெளியே சென்றபின் அவர் ஒரு கருஞ்சிவப்புக் கயிற்றைச் சாளரத்தில் கட்டி வைத்தார்.


22அவர்கள் மலைக்குச் சென்று, துரத்தி வந்தவர்கள் திரும்பிச் செல்லும் வரை மூன்று நாள்கள் அங்கே தங்கினார்கள். துரத்தியவர்கள் வழிநெடுகத்தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 23அங்கே தங்கியிருந்த இரண்டு ஒற்றர்களும் மலையிலிருந்து கீழே இறங்கிப் பயணம் செய்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து தங்களுக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர். 24மேலும், அவர்கள் யோசுவாவிடம், “நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்” என்றார்கள்.


2:1 எபி 11:31; யாக் 2:25. 2:10 விப 14:21; எண் 21:21-35.



அதிகாரம் 3:1-17

இஸ்ரயேலர் யோர்தானைக் கடத்தல்


1யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர். அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர். 2மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய், 3மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும். 4ஆயினும், உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில், நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை.” 5யோசுவா மக்களிடம், “உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்” என்றார். 6யோசுவா குருக்களிடம், “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்” என்றார். அவ்வாறே, அவர்களும் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள்முன் சென்றனர்.


7ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். 8உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு” என்றார். 9யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், “இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள். 10வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். அவர் உங்கள் முன்னிருந்து கானானியர், இத்தியர், இவ்வியர், பெரிசியர், கிர்காசியர், எமோரியர், எபூசியர் ஆகியோரை விரட்டிவிடுவார். 11இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது. 12இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள். 13உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்” என்றார்.


14மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர். 15உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும். 16மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல்** வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர்.✠ 17இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.


3:16 ‘உப்புக் கடல்’ என்பது மறுபெயர்.



அதிகாரம் 4:1-24

பன்னிரு நினைவுக் கற்கள்


1மக்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து முடிந்தபின் ஆண்டவர் யோசுவாவை நோக்கி, 2“மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகப் பன்னிருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுங்கள். 3“குருக்களின் பாதங்கள் இருக்கும் இடத்திலிருந்து பன்னிரு கற்களை எடுத்து உங்களுடன் கொண்டு வாருங்கள். அவற்றை நீங்கள் இவ்விரவு தங்குமிடத்தில் வையுங்கள்” என்றார். 4யோசுவா இஸ்ரயேல் மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவரை அழைத்தார். 5யோசுவா அவர்களிடம், “உங்கள் கடவுளாகிய ஆண்டவரது பேழைக்கு முன்பாக யோர்தான் நடுவில் கடந்து செல்லுங்கள். இஸ்ரயேல் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப உங்களில் ஒவ்வொருவனும் ஒரு கல்லைத் தோளில் சுமந்து செல்லட்டும். 6இவை உங்களிடையே ஓர் அடையாளமாக இருக்கும். இக்கற்கள் உங்களுக்கு எதைக் குறிக்கும் என்று பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கேட்பார்கள். 7அப்பொழுது நீங்கள் அவர்களுக்கு இவ்வாறு சொல்லுங்கள்: ‘யோர்தான் நீர் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையின்முன் பிரிந்து நின்றது. அப்பேழை யோர்தானைக் கடக்கும்பொழுது யோர்தானின் தண்ணீர் பிரிந்து நின்றது. இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டுவதற்காக உள்ளன’ என்று சொல்லுங்கள்” என்றார்.


8யோசுவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் செய்தனர். ஆண்டவர் யோசுவாவிடம் சொல்லியபடி யோர்தான் நதியின் நடுவிலிருந்து இஸ்ரயேல் மக்களின் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரு கற்களை எடுத்துக் கொண்டு தாங்கள் தங்கிய இடத்திற்குச் சென்று அங்கே வைத்தனர். 9யோசுவா பன்னிரு கற்களையும் யோர்தான் நடுவில் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்களின் பாதங்கள் நின்ற இடத்தில் வைத்தார். அவை அங்கே இந்நாள்வரை உள்ளன.


10இவ்வாறு, மக்களுக்குக் கூறும்படி ஆண்டவர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். இவை அனைத்தும் முடியும் வரை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவிலேயே நின்று கொண்டிருந்தனர். மக்களும் விரைவாகக் கடந்தனர். இதுவே மோசே யோசுவாவுக்கு அளித்திருந்த கட்டளை. 11மக்கள் அனைவரும் கடந்த பின், ஆண்டவரது பேழையோடு குருக்களும், மக்கள் காணக் கடந்து வந்தனர். 12மோசே அவர்களுக்குக் கூறியபடி ரூபன், காத்தின் மக்களும் மனாசேயின் அரைக் குலமும் படைக்கலன்கள் தாங்கியவராய், இஸ்ரயேல் மக்கள் காணக் கடந்து வந்தனர். 13ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் போருக்குத் தயாராக ஆண்டவரின் முன்னால் எரிகோ சமவெளிக்குச் சென்றனர். 14அன்று ஆண்டவர் யோசுவாவை இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உயர்த்தினார். அவர்கள் மோசேயை மதித்தது போல் இவரையும் வாழ்நாள் முழுவதும் மதித்தனர்.


15ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது: 16“உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிநிற்கும் குருக்களை யோர்தானிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிடு!” 17அவ்வாறே, யோசுவா குருக்களுக்கு “யோர்தானிலிருந்து வெளியேறுங்கள்” என்று கட்டளையிட்டார். 18ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானின் நடுவிலிருந்து வெளியேறி, தங்கள் பாதங்களைக் கரையில் வைத்தவுடன் யோர்தான் நீர் தன்னிடத்திற்குத் திரும்பியது. முன்புபோல் கரைகளைத் தொட்டு ஓடியது.


19முதல் மாதத்தின் பத்தாம் நாளன்று மக்கள் யோர்தானிலிருந்து வெளியேறினர். அவர்கள் எரிகோவில் கிழக்குப் பகுதியில் இருந்த கில்காலில் தங்கினர்.20யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு கற்களையும் யோசுவா கில்காலில் நாட்டினார். 21அவர் இஸ்ரயேலரிடம், “எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ‘ஏன் இந்தக் கற்கள்?’ என்று வினவினால், 22அவர்களிடம், இவ்வாறு தெரிவியுங்கள்: ‘உலர்ந்த தரை வழியாக இஸ்ரயேலர் இந்த யோர்தானைக் கடந்தனர்.’ 23உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நாங்கள் கடக்கும் வரை செங்கடலின் நீரை எங்கள் கண்முன் வற்றச் செய்ததுபோல, நீங்கள் கடக்கும் வரையிலும் யோர்தான் நீரை உங்கள் கண்முன் வற்றச் செய்துள்ளார்”. 24அதனால் உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர். நீங்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள்” என்றார்.



அதிகாரம் 5:1-15

1மேலை யோர்தானில் இருந்த எமோரிய நாட்டு அரசர்களும் கடலுக்கு அருகிலிருந்த கானானிய மன்னர்களும் ஆண்டவர் யோர்தான் நீரை இஸ்ரயேலர் கண்முன் அவர்கள் கடக்கும் வரையில் வற்றச்செய்தார் என்று கேள்வியுற்றபொழுது, அவர்களின் இதயங்கள் கலக்கமுற்றன. இஸ்ரயேலர்முன் அவர்கள் மனந்தளர்ந்தனர்.


கில்காலில் விருத்தசேதனம்


2அப்பொழுது ஆண்டவர் யோசுவாவிடம், “கற்களால் கத்திகள் செய்துகொள். இஸ்ரயேலருக்கு மீண்டும் விருத்தசேதனம் செய்” என்றார். 3அவ்வாறே யோசுவா கற்களால் கத்திகள் செய்து கொண்டார். கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் அவர் இஸ்ரயேலருக்கு விருத்தசேதனம் செய்தார். 4விருத்தசேதனம் செய்ததன் காரணம்; எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் வழியில் பாலைநிலத்தில் இறந்துவிட்டனர். 5வெளியேறிய மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். எகிப்திலிருந்து வெளியேறியபின் வழியில் பாலைநிலத்தில் பிறந்தவர் எவருக்கும் விருத்தசேதனம் செய்யப்படவில்லை. 6எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் அழியும்வரை, இஸ்ரயேலர் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்தனர். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் குரலைக் கேட்கவில்லை. ஆகவே, ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்கெனவே அவர்கள் மூதாதையருக்கு உறுதியளித்திருந்த அந்தப் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்கள் காணக் கூடாதென ஆணையிட்டுக் கூறினார்.✠ 7அழிந்தவர்களுக்குப் பதிலாக அவர்களின் பிள்ளைகளுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏனெனில், வழியில் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.


8எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பெற்று முடிந்ததும், அவர்கள் குணமாகும் வரையில் அங்கேயே பாளையத்தில் தங்கினர். 9ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார். ஆகவே, அந்த இடம் இந்நாள்வரை ‘கில்கால்’⁕ என்று அழைக்கப்படுகின்றது.


10இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர்.✠ 11பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். 12நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது.இஸ்ராயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.✠


யோசுவா கண்ட காட்சி


13அச்சமயத்தில் யோசுவா எரிகோவில் இருந்தார். அப்போது அவர் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ! ஓர் ஆடவர் அவர் எதிரில் தோன்றினார். கையில் உருவிய கத்தியுடன் அவர்நின்று கொண்டிருந்தார். யோசுவா அவரிடம் சென்று, “நீர் எங்கள் பக்கமா? அல்லது எதிரிகள் பக்கமா?” என்று கேட்டார். 14அவரோ, “இல்லை, நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்துள்ளேன்” என்றார். யோசுவா முகம் தரையில்பட வீழ்ந்து வணங்கி அவரிடம், “என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்?” என்று கேட்டார். 15ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம், “உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில், நீ நிற்கும் இடம் புனிதமானது” என்றார். யோசுவாவும் அப்படியே செய்தார்.


5:6 எண் 14:28-35. 5:10 விப 12:1-13. 5:12 விப 16:35. 5:9 எபிரேயத்தில், ‘நீக்குதல்’ என்பது பொருள்.



அதிகாரம் 6:1-27

எரிகோவைக் கைப்பற்றல்


1இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை; உள்ளே போகவுமில்லை. 2கடவுள் யோசுவாவிடம், “பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். 3போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுறை சுற்றி வாருங்கள். இவ்வாறு, ஆறு நாள்கள் செய்யுங்கள். 4ஏழு குருக்கள் கொம்புகளால் ஆகிய எக்காளங்களைப் பேழைக்கு முன் ஏந்திச் செல்லட்டும். ஏழாம் நாளில் நீங்கள் நகரை ஏழுமுறை சுற்றி வாருங்கள். அப்பொழுது குருக்கள் எக்காளங்களை முழங்கட்டும். 5அவர்களுடைய எக்காளத்தின் நீண்ட முழக்கத்தை நீங்கள் கேட்டவுடன்,நீங்கள் அனைவரும் பேரொலி எழுப்புங்கள். அப்பொழுது நகரின் மதில்கள் இடிந்துவிழும். உடனே மக்கள் அவரவர்களுக்கு முன்னே உள்ள பகுதிக்கு ஏறிச்செல்ல வேண்டும்” என்றார். 6நூனின் மகனாகிய யோசுவா குருக்களை அழைத்து அவர்களிடம், “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொள்ளுங்கள். ஏழு குருக்களும் ஏழு எக்காளங்களை ஆண்டவரது பேழைக்குமுன் ஏந்திக்கொண்டு போகட்டும்” என்று உரைத்துவிட்டு, 7மக்களை நோக்கி, “முன்னால் போங்கள்; நகரைச் சுற்றி வாருங்கள். போர்வீரர்கள் ஆண்டவரது பேழைக்குமுன் செல்லட்டும்” என்றார்.


8இவ்வாறு, யோசுவா மக்களுக்குக் கூறியவுடன் கொம்புகளால் ஆகிய ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் முன் எக்காளம் முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். உடன்படிக்கைப் பேழை அவர்களுக்குப் பின் சென்றது. 9முன்னணி வீரர் எக்காளங்களை ஊதிய குருக்களுக்குமுன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின. 10யோசுவா மக்களை நோக்கி, “நான் சொல்லும் நாள்வரை நீங்கள் ஆரவாரம் செய்யாமலும், யாதோர் ஓசை எழுப்பாமலும் இருங்கள். உங்கள் வாயினின்று ஒரு வார்த்தையும் புறப்படலாகாது. நான் கூறும்பொழுது ஆர்ப்பரியுங்கள்” என்று கட்டளையிட்டார். 11ஆண்டவரின் பேழை நகரை ஒருமுறை சுற்றி வந்தது. பின்னர், அவர்கள் பாளையத்திற்கு வந்து அங்கே இரவைக் கழித்தார்கள்.


12யோசுவா அதிகாலையில் எழுந்தார். குருக்கள் ஆண்டவரின் பேழையைச் சுமந்து சென்றார்கள். 13கொம்புகளாலான ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் பேழைக்குமுன் அவற்றை முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். முன்னணி வீரர் அவர்களுக்கு முன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் ஆண்டவரின் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின. 14இரண்டாம் நாளிலும் அவர்கள் நகரை ஒருமுறை சுற்றி வந்தனர். பின்னர், பாளையத்திற்குத் திரும்பினர். இவ்வாறு, ஆறுநாள்கள் செய்தனர்.


15ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். 16ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம், “இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார். 17நகரும் அதனுள் இருக்கும் அனைத்தும் ஆண்டவருக்குரியன. ஆகவே, அவை அழிவுக்குரியன. விலைமாது இராகாபும் அவருடன் வீட்டில் உள்ள அனைவரும் உயிருடன் இருப்பர். ஏனெனில், நாம் அனுப்பிய போர்வீரர்களை அவர் ஒளித்துவைத்தார். 18நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள். 19எல்லா வெள்ளியும் பொன்னும் வெண்கல இரும்புப் பாத்திரங்களும் ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே,ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும்” என்றார். 20மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின. எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு முன்னிருந்த பகுதியைத் தாக்கி நகரைக் கைப்பற்றினர். 21நகரில் இருந்த அனைத்தையும் அழித்தனர். ஆண்பெண், இளைஞர் முதியோர், ஆடு, மாடு கழுதை அனைத்தையும் வாள் முனையால் அழித்தனர்.


22நாட்டை உளவு பார்த்த இரண்டுபேரிடம் யோசுவா, “விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள்” என்றார். 23உளவு பார்த்த இளைஞர்கள் சென்றனர். இராகாபையும் அவர் தந்தையையும் தாயையும் அவர் சகோதரர்களையும் அவருக்கிருந்த அனைத்தையும் வெளியே கொண்டுவந்தனர். அவருடைய உறவினர்களையும் அழைத்து வந்தனர். அவர்களை இஸ்ரயேலின் பாளையத்திற்கு வெளியே தங்கச் செய்தனர். 24நகரையும் அதனுள் இருந்த அனைத்தையும் நெருப்பிலிட்டு எரித்தனர். வெள்ளியையும், பொன்னையும், வெண்கல இரும்புப் பாத்திரங்களையும் மட்டுமே ஆண்டவரது வீட்டின் கருவூலத்தின் சேர்த்தனர். 25விலைமாது இராகாபையும் அவர் தந்தையின் வீட்டாரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் யோசுவா உயிருடன் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் நடுவில் இன்றுவரை வாழ்கின்றார். ஏனெனில், எரிகோவை உளவு பார்க்க அனுப்பப்பட்ட தூதர்களை அவர் ஒளித்துவைத்தார்.✠


26அச்சமயம் யோசுவா எழுந்து, “எரிகோ என்னும் இந்நகரை மீண்டும் கட்டும் மனிதன் சபிக்கப்பட்டவன். அவன் கடைக்கால் இடுகையில் தன் முதல் மகனையும், அதன் வாயிற்கால்களை இடுகையில் தன் கடைசி மகனையும் இழப்பான்” என்றார்.✠ 27ஆண்டவர் யோசுவாவுடன் இருந்தார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவிற்று.


6:25 எபி 11:31. 6:26 1 அர 16:34.



அதிகாரம் 7:1-26

ஆக்கான் செய்த பாவம்


1இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது.


2பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இருந்த ஆயி என்னும் நகருக்கு எரிகோவிலிருந்து யோசுவா ஆள்களை அனுப்பினார். அவர்களிடம், “சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள்” என்றார். அவர்கள் சென்று ஆயி நகரை உளவறிந்தார்கள். 3அவர்கள் திரும்பி வந்து யோசுவாவிடம், “மக்கள் எல்லாரையும் அனுப்பவேண்டாம். இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் சென்று ஆயி நகரைத் தாக்கட்டும். மக்கள் எல்லாரும் அங்குச் சென்று களைப்படைய வேண்டாம். ஏனெனில், அங்குள்ளவர்கள் சிலரே” என்றனர். 4அவ்வாறே, மக்களிலிருந்து மூவாயிரம் பேர் சென்றனர். ஆனாலும், அவர்கள் ஆயி நகரின் ஆள்களுக்குமுன் தோற்று ஓடினார்கள். 5ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றார்கள். எனவே, மக்களின் நெஞ்சம் உறுதி இழந்து தண்ணீர்போல் ஆனது.


6ஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர். 7யோசுவா, “ஐயோ, என் தலைவராகிய ஆண்டவரே! மக்களை எமோரியர் கையில் ஒப்படைத்து, அழிப்பதற்காகவா யோர்தானைக் கடக்குமாறு செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்பாலேயே மனநிறைவோடு தங்கி இருந்திருக்க வேண்டும். 8என் ஆண்டவரே! இஸ்ரயேலர் தங்கள் எதிரிகளின்முன் புறமுதுகுகிட்டு ஓடிவிட்டார்களே! நான் இப்போது என்ன சொல்வேன்? 9கானானியரும் நாட்டில் வாழும் அனைவரும் இதைக் கேட்டு எங்களைச் சூழ்ந்துகொண்டு எங்கள் பெயரை உலகிலிருந்தே அழித்துவிடுவார்களே? அப்போது உமது பெருமை மிக்க பெயரைக் காக்க என்ன செய்வீர்?” என்றார்.


10ஆண்டவர் யோசுவாவிடம், “எழுந்திரு! ஏன் முகம்குப்புற விழுந்து கிடக்கின்றாய்? 11இஸ்ரயேலர் பாவம் செய்தனர். நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டனர். அவர்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எடுத்துக்கொண்டனர்; களவுசெய்தனர்; வஞ்சித்தனர்; அவற்றைத் தங்கள் பொருள்களுடன் சேர்த்துக் கொண்டனர். 12ஆகவேதான், இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளின்முன் நிற்க முடியவில்லை; புறமுதுகிட்டு ஓடினர். அவர்கள் அழிவுக்குரியவர்கள். உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குரியவற்றை நீங்கள் அழிக்காவிடில் நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன். 13எழுந்திரு. மக்களைப் புனிதமாக்கு; ‘நாளையதினம் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறு. ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இஸ்ரயேலரே! உங்களிடையே உள்ள அழிவுக்குரியவற்றை உங்களிடமிருந்து நாங்கள் விலக்கும்வரை உங்கள் எதிரிகளின்முன் உங்களால் நிற்க முடியாது.14காலையில் நீங்கள் உங்கள் குலங்களுக்கு அருகில் வருவீர்கள். எந்தக் குலத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரோ அந்தக் குலம் குடும்பம் குடும்பமாக அருகில் வரும். எந்தக் குடும்பத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரோ, அந்தக் குடும்பம் வீடுவீடாக வரும். எந்த வீட்டைக் குறிப்பிடுகின்றாரோ, அந்த வீட்டார் ஆள் ஆளாக வருவர். 15அழிவுக்குரியவற்றுடன் பிடிபடுபவனும் அவனுடையதனைத்தும் நெருப்பில் எரிக்கப்படும். ஏனெனில், அவன் ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி இஸ்ரயேலுக்குத் தீமை செய்தான்” என்றார்.


16யோசுவா காலையில் எழுந்து இஸ்ரயேலைக் குலம் குலமாக முன்னே வரச்செய்தார். யூதா குலம் பிடிபட்டது. 17எனவே, அவர் யூதா குலத்தை முன்னே வரச்செய்தார். செராகின் குடும்பம் பிடிபட்டது. ஆகவே, அவர் செராகின் குடும்பத்தை வீடு வீடாக முன்னே வரச் செய்தார். சபதி வீடு பிடிபட்டது. 18அவனது வீட்டாரை ஆள் ஆளாக முன்னே வரச்செய்தார். செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் பிடிபட்டான். அவன் யூதா குலத்தைச் சார்ந்தவன். 19யோசுவா ஆக்கானிடம், “என் மகனே! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி செலுத்தி அவருக்கு நன்றி கூறு! நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல். என்னிடமிருந்து மறைக்காதே” என்றார். 20ஆக்கான் யோசுவாவுக்கு மறுமொழியாக, “உண்மையில் நான் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன். நான் செய்தது இதுவே: 21அழிவுக்குரியவற்றுள்ஓர் அழகான பாபிலோனிய மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஐந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் கண்டேன். அவற்றின்மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக்கொண்டேன். எனது கூடாரத்திற்குள் வெள்ளி அடிப்பகுதியில் இருக்க அவற்றைத் தரையில் புதைத்து வைத்துள்ளேன்” என்றான்.


22யோசுவா தூதரை அனுப்பினார். அவர்கள் கூடாரத்திற்குள் விரைந்து சென்றனர். இதோ! வெள்ளி அடிப்பகுதியில் இருக்க, அவை அவனது கூடாரத்திற்குள் தரையில் புதைக்கப்பட்டிருந்தன. 23அவர்கள் கூடாரத்திலிருந்து அவற்றைக் கைப்பற்றினர். அவர்கள் அவற்றை யோசுவாவிடமும் எல்லா இஸ்ரயேல் மக்களிடமும் கொண்டுவந்து ஆண்டவர் திருமுன் பரப்பி வைத்தனர். 24செராகின் மகன் ஆக்கான், வெள்ளி, மேலாடை, தங்கக்கட்டி, அவனுடைய புதல்வர், புதல்வியர், அவனுடைய மாடு, கழுதை, ஆடு, கூடாரம் ஆகிய அவனுக்கிருந்த அனைத்தையும் யோசுவா கைப்பற்றி அவர்களோடு எல்லா இஸ்ரயேல் மக்களையும் ஆக்கோர் பள்ளத்தாக்கிற்குக் கூட்டி வந்தார். 25யோசுவா, “ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்? இன்றே ஆண்டவரும் உனக்குத் தொல்லை வருவிப்பார்” என்றார். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்பொருள்களைத் தீக்கிரையாக்கி அவனைச் சார்ந்தவர்களைக் கல்லால் எறிந்து கொன்றனர். 26அவன்மீது ஒரு பெரும் கற்குவியல் எழுப்பினர். அது இந்நாள்வரை உள்ளது. ஆண்டவர் தம் கடுஞ்சினத்தைத் தணித்துக்கொண்டார். ஆதலால், இந்நாள் வரை அவ்விடத்தின் பெயர் “ஆக்கோர்⁕ பள்ளத்தாக்கு” என அழைக்கப்படுகின்றது.


7:26 எபிரேயத்தில், ‘பேரிடர்’ என்பது பொருள்.



அதிகாரம் 8:1-35abcd
அதிகாரம் 9:1-27

கிபயோனியர் யோசுவாவை ஏமாற்றல்


1யோர்தானுக்கு இப்பக்க மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்கிலும் பெருங்கடலின் கரை முழுவதிலும் லெபனோனின் முன்பக்கம்வரை இருந்த மன்னர்கள் அனைவரும் இத்தியர், எமோரியர், கானானியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரும் இதைப்பற்றிக் கேள்வியுற்றனர். 2யோசுவாவுடனும் இஸ்ரயேலருடனும் போர் தொடுக்க அவர்கள் ஒன்றுகூடினர்.


3கிபயோன் குடிமக்கள் எரிகோவிற்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைப் பற்றிக் கேள்வியுற்றனர். 4-5கிபயோன் குடிமக்கள் தூதர் போல் தந்திரமாகச் சென்றார்கள். அவர்கள் தங்கள் கழுதைகளின் மீது கிழிந்த மூட்டைகளையும், பழைய கிழிந்து தைக்கப்பட்ட திராட்சை இரசத் தோல்பைகளையும் ஏற்றிக் கொண்டு, பழைய தைக்கப்பட்ட காலணிகளையும், பழைய ஆடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்து சாம்பல் பூத்துவிட்ட அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர். 6அவர்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் சென்றார்கள். அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும், “நாங்கள் தொலைநாட்டிலிருந்து வருகின்றோம். இப்பொழுது எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள்” என்றனர். 7இஸ்ரயேல் மக்கள் இவ்வியரிடம், “நீங்கள் எங்கள் நடுவில் வாழ்கின்றீர்கள். நாங்கள் உங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளமாட்டோம்” என்றார்கள்.✠ 8அவர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உங்கள் பணியாளர்கள்” என்றனர். யோசுவா அவர்களிடம் “நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டார். 9அவர்கள் அவரிடம், “மிகவும் தொலையில் உள்ள நாட்டிலிருந்து உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் உங்கள் பணியாளர்கள் வந்திருக்கின்றார்கள். ஏனெனில், அவரது பெயரைப் பற்றியும், அவர் எகிப்து நாட்டில் செய்த அனைத்தைப்பற்றியும் கேள்விப்பட்டோம். 10யோர்தானுக்கு அப்பால் வாழ்ந்த எஸ்போன் மன்னன் சீகோன், அஸ்தரோத்திலிருந்த பாசான் மன்னன் ஓகு ஆகிய இரண்டு எமோரிய மன்னர்களுக்கும் அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றியும் கேள்வியுற்றோம்.✠11எங்கள் பெரியோர்களும் எங்கள் நாட்டில் வாழ்வோர் அனைவரும் எங்களிடம், “உங்கள் கைகளில் வழி உணவை எடுத்துக்கொண்டு அவர்களைச் சந்திக்கச் செல்லுங்கள். அவர்களிடம் நாங்கள் உங்கள் பணியாளர்கள். இப்போது எங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள் என்று கூறுங்கள்” என்றனர். 12நாங்கள் உங்களிடம் வர எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, வழி உணவாக எடுத்துக் கொண்ட இந்த அப்பம் சூடாக இருந்தது. இப்போதோ காய்ந்து சாம்பல் பூத்துவிட்டது. 13“இவை திராட்சை ரசத் தோல்பைகள். நாங்கள் நிரப்பிய போது புதியனவாக இருந்தன. இப்போதோ கிழிந்துவிட்டன. எங்கள் ஆடைகளும் எங்கள் மிதியடிகளும் மிகநெடும் பயணத்தினால் கிழிந்து விட்டன” என்றனர். 14இஸ்ரயேல் மக்கள் அவர்களது உணவை எடுத்துக் கொண்டனர்; ஆண்டவரது வார்த்தையை நாடவில்லை. 15யோசுவா கிபயோன் மக்களை நல்லிணக்கத்தோடு ஏற்று, அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களை வாழவிட்டார். சபைத்தலைவர்கள் அவர்களுக்கு ஆணையிட்டு வாக்களித்தனர்.


16அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ளவர்கள் என்றும், அடுத்து வாழ்பவர்கள் என்றும் கேள்வியுற்றனர். 17இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு, மூன்றாம் நாள் அவர்கள் நகருக்கு வந்தனர். கிபயோன், கெபிரா, பெயரோத்து, கிரியத்து எயாரிம் ஆகியவையே அந்நகர்கள். 18இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை. ஏனெனில், சபையின் தலைவர்கள் அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு வாக்களித்திருந்தார்கள். சபை முழுவதும் தலைவர்களுக்கு எதிராக முணுமுணுத்தது. 19எல்லாத் தலைவர்களும் சபையின் அனைவரிடமும், “அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளித்துவிட்டோம். இப்பொழுது நாங்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.20நாம் இவ்வாறு செய்வோம்: அவர்களை வாழ விடுவோம். நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் குறித்து ஆண்டவரின் சினம் நம்மீது விழாமலிருக்கும்” என்றனர். 21மேலும், தலைவர்கள் அவர்களிடம், “அவர்கள் வாழட்டும். ஆனால், சபை முழுவதற்கும் அவர்கள் மரம் வெட்டுபவர்களாகவும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் ஆகட்டும்” என்று கூறித் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொண்டனர்.


22யோசுவா அவர்களை அழைத்து, “நீங்கள் எங்களுக்கு மிக அருகில் வாழ்கின்றீர்களே! பின்னர், “நாங்கள் உங்களிடமிருந்து வெகு தொலையில் வாழ்பவர்கள்” என்று கூறி எங்களை ஏன் ஏமாற்றினீர்கள்? 23நீங்கள் இப்போது சபிக்கப்பட்டவர்கள். உங்கள் அடிமைத்தனம் நீங்காது. மரம் வெட்டுபவர்களாகவும் என் கடவுளின் இல்லத்திற்குத் தண்ணீர் எடுப்பவர்களாகவும் இருப்பீர்கள்” என்றார். 24அவர்கள் யோசுவாவிற்கு மறுமொழியாக, “உங்கள் கடவுளாகிய ஆண்டவர், தம் ஊழியர் மோசேக்கு எல்லா நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், உங்கள் முன்னிலையில் நாட்டில் வாழ்பவர்கள் அனைவரையும் அழிக்கவும் கட்டளையிட்டார் என்று உங்கள் பணியாளர்களுக்குக் கூறப்பட்டது. ஆகவே, நாங்கள் மிகவும் அஞ்சி இவ்வாறு செய்தோம். 25இப்பொழுது இதோ! நாங்கள் உங்கள் கையில் உள்ளோம். எது நல்லதும் நீதியும் ஆனதோ அதைச் செய்யுங்கள்” என்றனர். 26அவர் அவர்களுக்குச் செய்தது; அவர் இஸ்ரயேல் மக்களின் கைகளினின்று அவர்களை விடுவித்தார். இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை. 27யோசுவா, அந்நாளில் அவர்களை மரம் வெட்டுபவர்களாகவும், சபைக்கும் ஆண்டவரின் பீடத்திற்கும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் நியமித்தார். அவர் அவர்களுக்குக் குறித்த இடத்தில் இன்றுவரை அவர்கள் உள்ளனர்.


9:7 விப 23:32; 34:12; இச 7:2. 9:10 எண் 21:21-35.



அதிகாரம் 10:1-43

யோசுவா எமோரியரைத் தோற்கடித்தல்


1யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான். 2அவன் மிகவும் அச்சமுற்றான். ஏனெனில், பெருநகரான கிபயோன் அரச நகர்களில் ஒன்றாகவும் ஆயியைவிடப் பெரிய நகராகவும் அதன் மக்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தும் அது சமாதானம் செய்து கொண்டது. 3எபிரோன் மன்னன் ஓகாம், யார்முத்து மன்னன் பிராம், இலாக்கிசு மன்னன் யாப்பியா, எக்லோன் மன்னன் தெபீர் ஆகியோருக்கு எருசலேம் மன்னன் அதோனிசெதக்கு 4“எனக்கு உதவி செய்ய வாருங்கள். நாம் கிபயோனைத் தாக்குவோம். ஏனெனில், அது யோசுவாவுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் சமாதானம் செய்து கொண்டுள்ளது” என்று சொல்லியனுப்பினான். 5அவ்வாறே, எமோரிய இனத்தைச் சார்ந்த எருசலேம், ஏபிரோன், யார்முத்து, இலாக்கீசு, எக்லோன் ஆகியவற்றின் ஐந்து மன்னர்களும் ஒன்றுகூடி அவர்கள் படைகளுடன் சென்றார்கள்; கிபயோனுக்கு எதிரில் பாளையம் இறங்கி அதன்மீது போர்தொடுத்தார்கள்.


6கிபயோன் மக்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது: “உம் பணியாளர்களைக் கைவிடாதீர். விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், மலைப்பகுதியில் வாழும் எல்லா எமோரிய மன்னர்களும் எங்களை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்.” 7எனவே, கில்காலிலிருந்து, யோசுவா தம் போர்வீரர்கள் அனைவருடனும் வலிமைமிக்க வீரர்களுடனும் புறப்பட்டுச் சென்றார். 8ஆண்டவர் யோசுவாவிடம், “அவர்கள் முன் அஞ்சாதே; ஏனெனில், அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்” என்றார். 9யோசுவா கில்காலிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து, அவர்களை நோக்கித் திடீரென வந்தார். 10ஆண்டவர் இஸ்ரயேல்முன் எமோரியரைத் துன்புறுத்தினார்; கிபயோனில் அவர்களை வன்மையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தார்; அவர் அவர்களைப் பெத்கோரோனின் மேட்டு வழியே அசேக்கா, மக்கேதா வரை துரத்தித் தாக்கினார். 11அவர்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெத்கோரோனுக்குத் தப்பி ஓடுகையில் ஆண்டவர் அவர்கள்மீது அசேக்காவரை பெரும் கற்களை வானத்திலிருந்து பொழிந்தார். இஸ்ரயேலரின் வாளால் கொல்லப்பட்டவர்களைவிடக் கல்மழையால் இறந்தவர்கள் அதிகம்.


12கடவுள் எமேரியரை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்த அன்று யோசுவா ஆண்டவரிடம் பேசினார். அவர் இஸ்ரயேலர் கண்முன், “கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்” என்றார்.


13அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன. இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா? ‘கதிரவன் நடுவானில் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது இறங்குவதற்கு விரையவில்லை’.


✠ 14ஆண்டவர் மனிதக் குரலைக் கேட்டு, இஸ்ரயேலுக்காகப் போரிட்ட அந்நாளைப்போன்று அதற்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை.


15யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர். 16அந்த ஐந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, மக்கேதாவில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள். 17அவர்கள் மக்கேதாக் குகையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி யோசுவாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. 18யோசுவா, “குகையின் வாயிலில் பெருங்கற்களை வையுங்கள். அவர்களைக் காவல் காக்க அதற்கருகில் ஆள்களை நிறுத்துங்கள்.19நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள். அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்” என்றார். 20யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் அவர்களை வன்மையாகத் தாக்கி அவர்கள் முற்றிலும் அழியும்வரை அவர்களைக் கொன்று முடித்தனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடியவர்கள் பாதுகாக்கப்பட்ட நகர்களுக்குள் நுழைந்தார்கள். 21மக்கேதாவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் மக்கள் அனைவரும் நலமே திரும்பினர். இஸ்ரயேலுக்கு எதிராக எவரும் வாய்திறக்கக்கூட இல்லை.


22யோசுவா, “குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஐந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார். 23அவர்கள் அவ்வாறே செய்தனர்; எருசலேம், எபிரோன், யார்முத்து, இலாக்கிசு, எக்லோன் ஆகிய நகர்களின் ஐந்து மன்னர்களையும் குகையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். 24அவர்கள் அந்த மன்னர்களை யோசுவாவிடம் கொண்டு வந்தபொழுது, யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்து, அவருடன் சென்ற போர்த் தலைவர்களிடம், “அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள்” என்றார். அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர். 25யோசுவா அவர்களிடம், “அஞ்சாதீர்கள்; கலங்காதீர்கள்; திடமும் துணிவும் கொண்டிருங்கள். ஏனெனில், ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார்” என்றார். 26அதற்குப்பின் யோசுவா அந்த ஐந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார். அவர்களின் சடலங்களை ஐந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார். 27கதிரவன் மறையும் நேரத்தில் யோசுவா அச்சடலங்களை இறக்கிவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவற்றை அவர்கள் முன்பு ஒளிந்திருந்த குகைக்குள் எறிந்தார்கள். குகையின் வாயிலில் பெருங்கற்களை வைத்தார்கள். அவை இந்நாள்வரை உள்ளன.


28யோசுவா அன்று மக்கேதாவைப் கைப்பற்றினார். அதையும் அதன் மன்னனையும் வாள்முனையில் கொன்றார். அவர்களைக் கொன்று அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், மக்கேதா மன்னனுக்கும் செய்தார்.


29யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர். 30ஆண்டவர் லிப்னா மக்களையும் மன்னனையும் இஸ்ரயேல் மக்கள் கையில் ஒப்படைத்தார். அதை அவர் வாள்முனையில் அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், அதன் மன்னனுக்கும் செய்தார்.


31யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் லிப்னாவிலிருந்து இலாக்கிசுக்குச் சென்று அதை முற்றுகையிட்டுத் தாக்கினார்கள். 32ஆண்டவர் இலாக்கிசை இஸ்ரயேலின் கையில் ஒப்படைத்தார். அதை இரண்டாம் நாளில் யோசுவா கைப்பற்றினார். வாள்முனையில் அதை அழித்தார்; அதனுள் இருந்த அனைவருக்கும் லிப்னாவுக்குச் செய்தது போல் செய்தார்.


33கெசேரின் மன்னன் ஓராம் இலாக்கிசுக்கு உதவி செய்யச் சென்றான். யோசுவா அவனையும் அவன் மக்களையும் எவரும் தப்பாதபடி கொன்றார்.


34யோசுவாவும் அவருடன் இஸ்ரயேலர் எல்லாரும் இலாக்கிசிலிருந்து எக்லோனுக்குச் சென்று, அதை முற்றுகையிட்டுத் தாக்கினர். 35அவர்கள் அதை அன்றே கைப்பற்றி, இலாக்கிசுக்குச் செய்ததுபோல், அன்றே அதையும் அதில் வாழ்ந்த அனைவரையும் கொன்று அழித்தனர்.


36யோசுவாவும் அவர் மக்களாகிய இஸ்ரயேலர் எல்லாரும் எக்லோனிலிருந்து எபிரோனுக்குச் சென்று அதைத் தாக்கினர். 37அதைத் தாக்கி, அதன் மன்னனையும், அதன் நகர்களையும், அதனுள் இருந்த அனைத்து உயிர்களையும் வாள்முனையில் கொன்றனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. எக்லோனுக்கு செய்த அனைத்தையும் அதற்கும் அவர் செய்தார்; அதையும் அதனுள் இருந்த அனைவரையும் அழித்தார்.


38யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்களும் தெபீருக்குத் திரும்பி அதனைத் தாக்கினர். 39அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர். அவர்களை வாள்முனையில் தாக்கினர். அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. லிப்னாவுக்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார்.


40யோசுவா எல்லா மலைநாட்டையும் தாக்கினார். நெகேபு சமவெளியையும், பள்ளத்தாக்கையும் அதன் மன்னர்களையும் கைப்பற்றினார்; எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டது போல் அவர்களை அழித்தார். 41யோசுவா காதேசு பர்னேயாவிலிருந்து காசா வரை கோசேன் நாடு முழுவதையும் கிபயோன்வரை தோற்கடித்தார். 42யோசுவா எல்லா மன்னர்களையும் நாடுகளையும் ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேலுக்காகப் போரிட்டார். 43யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.


10:13 2 சாமு 1:18.



அதிகாரம் 11:1-23

யாபினையும் பிற மன்னர்களையும் தோற்கடித்தல்


1ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான். 2மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும் 3கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், மலைவாழ் எபூசியர், மிஸ்பா நாட்டில் எர்மோனின் அடிவாரத்தில் இருந்த இவ்வியர் ஆகியோருக்கும் ஆளனுப்பினான். 4அவர்களும் அவர்களுடைய படைகளும் கடற்கரையில் உள்ள மணலைப் போல் எண்ணிறந்த மக்களும் குதிரைகளும் தேர்களும் சென்றனர். 5அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக மேரோம் நீரோடைக் கரையில் இஸ்ரயேலருடன் போரிடப் பாளையம் இறங்கினார்கள்.


6ஆண்டவர் யோசுவாவிடம், “அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில், நாளை இந்நேரம் நான் அவர்கள் அனைவரையும் கொலையுண்டவர்களாய் இஸ்ரயேல்முன் ஒப்படைப்பேன். அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை நீ வெட்டுவாய். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்குவாய்" என்றார். 7யோசுவாவும் அவருடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் திடீரென அவர்களுக்கெதிராக மேரோம் நீரோடைக்கருகில் வந்து அவர்களைத் தாக்கினர். 8ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்தார். அவர்களை இஸ்ரயேலர் கொன்றனர். அவர்களைப் புகழ்மிக்க சீதோன் வரையிலும், மிஸ்ரபோத்துமயிம் வரையிலும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரையிலும் எவரும் தப்பி விடாதவாறு தாக்கினர். 9ஆண்டவர் சொன்னபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தார். குதிரைகளின் குதிகால் நரம்புகளை வெட்டினார். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்கினார்.


10இச்சமயம் யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார். அதன் மன்னனை வாளால் தாக்கினார். ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது. 11இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை; ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர். 12யோசுவா, அந்த எல்லா நகர்களையும் அவற்றின் மன்னர்களையும் கைப்பற்றினார். ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டிருந்தபடி அவர்களை வாள்முனையில் கொன்று அடியோடு அழித்தார். 13மேட்டுப் பகுதியில் நிறுவப்பட்ட நகர்களை இஸ்ரயேல் மக்கள் எரிக்கவில்லை. யோசுவா ஆட்சோரை மட்டும் எரித்தார். 14அந்நகர்களில் கைப்பற்றிய பொருள்களையும் கால்நடைகளையும் இஸ்ரயேலர் கொள்ளைப் பொருளாகக் கொண்டனர். மனிதர்களை மட்டும், எவரும் தப்பாமல் அடியோடு அழியும்வரை, வாள்முனையில் கொன்றனர்; ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை. 15தம் ஊழியர் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார். யோசுவா அதன்படியே செய்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவை அனைத்திலும் யோசுவா ஒன்றையும் விட்டுவிடவில்லை.


யோசுவா கைப்பற்றிய நிலப்பகுதிகள்


16யோசுவா இந்த எல்லா நாடுகளையும், மலைகளையும், நெகேபு அனைத்தையும், கோசேன் நாடு முழுவதையும், சமவெளிப் பகுதிகளையும், அராபாவையும், இஸ்ரயேல் மலைகளையும் அதன் சமவெளிப் பகுதிகளையும் கைப்பற்றினார். 17ஆலாக்கு மலையிலிருந்து சேயிர் வரை உயர்ந்து செல்லும் எர்மோன் மலைக்குக்கீழ் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காது வரை இருந்த பகுதிகளைக் கைப்பற்றி, அவற்றின் அரசர்களைப் பிடித்து, வெட்டிக் கொன்றார். 18யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார். 19கிபயோன் குடிமக்களான இவ்வியரைத்தவிர வேறெந்த நகரினரும் இஸ்ரயேலருடன் நல்லுறவு கொள்ளவில்லை. எல்லோரையும் போரில் இஸ்ரயேலர் தோற்கடித்தனர். 20இஸ்ரயேலருடன் போர் புரியுமாறு அவர்கள் இதயங்களை ஆண்டவர் கடினப்படுத்தினார். அதனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டதுபோல் அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டனர்.✠ 21இச்சமயம் யோசுவா சென்று, மலைநாடு, எபிரோன், தெபீர், அனாபு, யூதாவின் அனைத்து மலைப்பகுதிகள், இஸ்ரயேலின் அனைத்து மலைப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்த அனாக்கியரை அழித்தார். அவர்களை அவர்களின் நகர்களுடன் யோசுவா முற்றிலும் அழித்தார். 22இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை. காசா, காத்து, அஸ்தோது ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர். 23ஆண்டவர் மோசேக்குக் கூறிய அனைத்தின்படி, யோசுவா எல்லா நிலத்தையும் கைப்பற்றினார். யோசுவா அதை அவர்கள் குலப் பிரிவுகளின்படி இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். நாடு முழுவதும் போரின்றி அமைதிகண்டது.


11:20 இச 7:16.



அதிகாரம் 12:1-24

மோசே தோற்கடித்திருந்த அரசர்கள்


1யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே; 2எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் கிலயாதின் பகுதிவரையிலும் அம்மோனியரின் எல்லையான யப்போக்குப் பள்ளத்தாக்குவரையிலும் 3அராபாவிலிருந்து கிழக்கே கினரோத்துக் கடல்வரையிலும் உப்புக்கடலான அராபா கடல்வரையிலும், கிழக்கு நோக்கி பெத்தசிமோத்து வரையிலும், தெற்கில் பிஸ்கா மலைச்சரிவு வரையிலும் அரசாண்டான். 4இரபாயியருள் எஞ்சி இருந்தவனும் பாசானின் மன்னனுமான ஓகின் எல்லை இதுவே; அவன் அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வாழ்ந்தான். 5எர்மோன்மலை, சல்காமலை, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைவரையிலும் எஸ்போன் மன்னன் சீகோனின் எல்லையான கிலயாதின் பாதிவரையிலும் ஆண்டான். 6ஆண்டவரின் ஊழியரான மோசேயும் இஸ்ரயேலரும் அவர்களைத் தோற்கடித்தனர். ஆண்டவரின் ஊழியரான மோசே அதை ரூபனுக்கும் காத்துக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உரிமையாகக் கொடுத்தார்.✠


யோசுவா தோற்கடித்த மன்னர்கள்


7யோசுவாவும் இஸ்ரயேலரும் கைப்பற்றிய நாடுகளின் மன்னர்கள் இவர்களே. யோர்தானுக்கு மேற்கே பாகால்காதில் லெபனோன் பள்ளத்தாக்கிலிருந்து சேயிர்பக்கம் செல்லும் ஆலாக்கு மலைவரை இருந்த மன்னர்களின் நாட்டை யோசுவா இஸ்ரயேலருக்கு அவர்களின் குலப்பிரிவின்படி உடைமையாக அளித்தார். 8மலைச்சரிவு, பள்ளத்தாக்கு, அராபா மலைச்சரிவு, பாலைநிலம், நெகேபு, இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரின் நாடுகள். 9எரிகோ மன்னன் ஒருவன்; பெத்தேலுக்கு அருகில் இருந்த ஆயி மன்னன் ஒருவன். 10எருசலேம் மன்னன் ஒருவன்; எபிரோன் மன்னன் ஒருவன், 11யார்முத்து மன்னன் ஒருவன்; இலாக்கிசு மன்னன் ஒருவன். 12எக்லோன் மன்னன் ஒருவன்; கெசேர் மன்னன் ஒருவன். 13தெபீர் மன்னன் ஒருவன்; கெதேர் மன்னன் ஒருவன். 14ஒர்மா மன்னன் ஒருவன்; அராது மன்னன் ஒருவன். 15லிப்னா மன்னன் ஒருவன்; அதுல்லாம் மன்னன் ஒருவன். 16மக்கேதா மன்னன் ஒருவன்; பெத்தேல் மன்னன் ஒருவன். 17தப்புவாகு மன்னன் ஒருவன்; ஏபேர் மன்னன் ஒருவன். 18அப்பேக்கு மன்னன் ஒருவன்; இலாசரோன் மன்னன் ஒருவன். 19மாதோன் மன்னன் ஒருவன்; ஆட்சோர் மன்னன் ஒருவன். 20சிம்ரோன் மெரோன் மன்னன் ஒருவன்; அக்சாபு மன்னன் ஒருவன். 21தானாக்கு மன்னன் ஒருவன்; மெகிதோ மன்னன் ஒருவன். 22கெதேசு மன்னன் ஒருவன்; யோக்னயாம் கர்மேல் மன்னன் ஒருவன். 23நாபோத்தோரில் இருந்த தோர் மன்னன் ஒருவன்; கில்காலில் ஒருந்தகோயிம் மன்னன் ஒருவன். 24திர்சா மன்னன் ஒருவன்; ஆக மொத்தம் முப்பத்தொரு மன்னர்கள்.


12:1-5 எண் 21:21-35; இச 2:26; 3:11. 12:6 எண் 32:33; இச 3:12.



அதிகாரம் 13:1-33

யோசுவாவுக்கு ஆண்டவர் இட்ட கட்டளை


1யோசுவா வயதாகி முதுமை அடைந்தார். ஆண்டவர் அவரிடம், “உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது. 2எஞ்சியுள்ள நிலங்கள் இவையே; பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள். 3எகிப்துக்கு எதிரில் உள்ள சீகோரிலிருந்து வடக்கில் எக்ரோன் எல்லைவரை, கானானியருடையதாகக் கருதப்பட்ட காசா, அஸ்தோத்து, அஸ்கலோன், காத்து, எக்ரோன் ஆகிய பகுதிகளின் ஐந்து பெலிஸ்திய மன்னர்கள், மற்றும் அவ்வாயர், 4தெற்கிலிருந்து கானான் நாடு முழுவதும் சீதோனியருக்குச் சொந்தமான மெயாரா, அபேக்கு வரையிலும், எமோரியரின் எல்லை வரையிலும் உள்ள பகுதிகள், 5கெபாலியரின் நாடு, லெபனோன் முழுவதும், எர்மோன் மலையின்கீழ் கதிரவன் உதிக்கும் பாகால்காதிலிருந்து ஆமாத்துக் கணவாய் வரை உள்ள பகுதியும். 6லெபனோனிலிருந்து மிஸ்ரபோத்துமயிம் வரை உள்ள அனைத்து மலைவாழ் மக்கள், அனைத்து சீரோனியர் — இவர்களை இஸ்ரயேல் முன்னிலையில் நானே வெளியேற்றுவேன். நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீயும் அதை இஸ்ரயேலுக்கு உடைமையாகக் கொடு.✠ 7இப்போது இந்த நாட்டை ஒன்பது குலங்களுக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உடைமையாகக் குறித்துக்கொடு” என்றார்.


யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதியைப் பங்கிடல்


8அத்துடன் ரூபன், காத்து மக்களுக்கும், மனாசேயின் பாதிக் குலத்திற்கும் யோர்தானுக்கு கிழக்கே ஆண்டவரின் ஊழியர் மோசே குறித்துக் கொடுத்தவாறே உடைமையாக்கப் பெற்றவை;✠ 9அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையில் உள்ள அரோயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள நகர்வரையிலும் மெதபா சமவெளி முழுவதும், தீபோன் வரையிலும், 10எஸ்போனில் ஆட்சிசெய்த எமோரியரின் மன்னன் சீகோனின் நகரங்கள் அனைத்தும், அம்மோனியரின் எல்லை வரையிலும், 11கிலயாத்து, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைகள், எர்மோன்மலை முழுவதும், சால்காவரை பாசான் முழுவதும்; 12இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிலேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார். 13கெசூரியர், மாக்காத்தியரின் நாடுகளையோ இஸ்ரயேலர் கைப்பற்றவில்லை. கெசூரியரும் மாக்காத்தியரும் இந்நாள்வரை இஸ்ரயேலர் இடையே வாழ்கின்றனர். 14லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை. அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும்.✠


ரூபனுக்கு அளிக்கப்பட்ட பகுதி


15ரூபனின் குலத்திற்கு அவர்களின் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன: 16அவர்களது எல்லை அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் அரோயேரிலிருந்து சமவெளியின் நடுவில் உள்ள நகர்வரை, மற்றும் மேதபாவில் உள்ள சமவெளி முழுவதும்; 17சமவெளியில் உள்ள எஸ்போனும் அதன் எல்லா நகர்களும், தீபோன் பாமோத்துபாகால், பெத்பாகால்மெகோன்; 18யாகசு, கெதமோத்து, மேபாத்து; 19கிரியத்தாயிம், சிப்மா, கர் சமவெளியில் உள்ள செரெத்துசாகர்; 20பெத்பெகோர், பிஸ்கா பள்ளத்தாக்கு, பெத்தசிமோத்து; 21அதாவது, சமவெளியில் உள்ள எல்லா நகர்களும், எஸ்போனில் ஆண்டு வந்த எமோரிய அரசன் சீகோனின் எல்லா அரசுகளும், மோசே அவனையும், மிதியான், ஏவி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியவற்றின் தலைவர்களையும், அந்நாட்டில் வாழ்ந்த சீகோன் தலைவர்களையும் தாக்கினார். 22இஸ்ரயேல் மக்கள் வாளால் கொன்றவர்களில் நிமித்திகள் பெகோரின் மகன் பிலயாமும் ஒருவன். 23ரூபன் மக்களின் எல்லை யோர்தான் நதிக்கரை. அப்பகுதியின் நகர்களும், குடியிருப்புகளும், அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் மக்களின் உடைமையாகியது.


காத்துக்கு அளிக்கப்பட்ட பகுதி


24காத்தின் குலத்தைச் சார்ந்த மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன; 25யாசேர், கிலயாதின் எல்லா நகர்கள், இரபாவின் கிழக்கில் அரோயேர்வரை, அம்மோனியரின் நிலத்தில் பாதி, 26எஸ்போனிலிருந்து இராமத்து மிட்சப்பே வரை, பெத்தோனிம் மகனயிம் இவற்றிலிருந்து தெபீரின் எல்லைவரை. 27பெத்தோராம் பள்ளத்தாக்கில் பேத்நிம்ரா, சுக்கோத்து, சாபோன், எஸ்போனின் மன்னன் சீகோனின் எஞ்சியிருந்த அரசுகள், யோர்தான் எல்லையாக கினரேத்துக் கடல் முடிவு வரை. யோர்தானுக்கு அப்பால் கிழக்குவரை உள்ள பகுதிகள். 28காத்தின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி இப்பகுதி நகர்களும் குடியிருப்புகளும் உடைமையாயின.


மனாசேக்கு அளிக்கப்பட்ட பகுதி


29மனாசேயின் பாதிக் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன; 30அவர்களுடைய எல்லை, மகனயிமிலிருந்து பாசான் முழுவதும், பாசானின் அரசன் ஓகின் அரசு முழுவதும், பாசானில் உள்ள அறுபது நகர்களும் யாயிரின் குடியிருப்புகள் முழுவதும்; 31கிலயாதில் பாதி, அஸ்தரோத்து, எதிரேயி, பாசானில் இருந்த ஓகின் அரசு நகர்கள். இவை மனாசேயின் மகன் மாக்கிருக்கும், மாக்கிரின் பாதி மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அளிக்கப்பட்டன. 32எரிகோவிற்குக் கிழக்கே யோர்தானுக்கு அப்பால் மோவாபுச் சமவெளியில் இருந்தபோது, மோசே இப்பகுதிகளை உடைமையாகக் கொடுத்தார். 33ஆனால், லேவியர் குலத்திற்கு மோசே உடைமை அளிக்கவில்லை. அவர்களுக்கு அவர் கூறியபடி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே அவர்களின் உடைமை.✠


13:6 எண் 33:54. 13:8 எண் 32:33; இச 3:12. 13:14 இச 18:1. 13:33 எண் 18:20; இச 18:2.



அதிகாரம் 14:1-15

யோர்தானுக்கு மேற்கே உள்ள பகுதியைப் பங்கிடல்


1கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் இவையே. இவற்றைக் குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள் ஆகியோர் இஸ்ரயேல் மக்களுக்கு உடைமையாக அளித்தனர். 2மோசேயின் மூலம் ஆண்டவர் கட்டளையிட்டபடி ஒன்பது குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் திருவுளச்சீட்டு மூலம் உடைமை அளிக்கப்பட்டது.✠ 3மோசே இரண்டு குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் யோர்தானுக்கு அப்பால் உடைமை அளித்தார். லேவியர்களுக்கு அவர்கள் நடுவில் உடைமை அளிக்கவில்லை.✠ 4யோசேப்பின் புதல்வர் மனாசே, எப்ராயிம் என்று இரண்டு குலங்களாக இருந்தனர். லேவியருக்கு நிலத்தில் பங்கு தரப்படவில்லை. ஆனால், அவர்கள் தங்குவதற்கு நகர்களும் அவர்களின் கால்நடைகளுக்கும் மற்ற உடைமைகளுக்கும் மேய்ச்சல் நிலங்களும் தரப்பட்டன. 5ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்து நிலத்தைப் பகிர்ந்து கொண்டனர்.


6யூதாவின் மக்கள் கில்காலில் யோசுவாவிடம் வந்தனர். கெனிசியனும் எபுன்னேயின் மகனுமான காலேபு அவரிடம், “ஆண்டவர் கடவுளின் மனிதரான மோசேயிடம் காதேசு பர்னேயாவில் என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் கூறிய வார்த்தை என்ன என்று உனக்குத் தெரியும்.✠ 7நான் நாற்பது வயதாக இருக்கும்போது ஆண்டவரின் ஊழியராகிய மோசே என்னைக் காதேசு-பர்னேயாவிலிருந்து நாட்டை உளவறிய அனுப்பினார். திரும்பி வந்து என் மனத்திற்குப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன்.✠ 8என்னுடன் வந்த என் சகோதரர் மக்களின் இதயத்தை அச்சத்தால் நடுங்கச் செய்தனர். நான் முற்றிலும் என் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றினேன். 9மோசே அந்நாளில், “நீ என் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றியதால், உன் காலடி பட்ட நிலத்தை எல்லாம் உறுதியாகவே உனக்கும் உன் மக்களுக்கும் என்றும் உடைமையாக அளிப்பேன்” என்று எனக்கு ஆணையிட்டுக் கூறினார்.✠ 10இதோ! அவர் கூறியது போல் நாற்பது ஆண்டுகளாக இதுவரை ஆண்டவர் என்னை உயிருடன் வைத்துள்ளார். இதை ஆண்டவர் மோசேயிடம் கூறியபொழுது இஸ்ரயேலர் பாலைநிலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இப்போது இதோ நான் எண்பத்தைந்து வயதானவன். 11மோசே என்னை அனுப்பிய நாளன்று வலிமையுடன் இருந்ததுபோல் மீண்டும் போர் புரிவதற்கும் போவதற்கும் வருவதற்கும் வலிமையுடன் இருக்கின்றேன்.12ஆண்டவர் அந்நாளில் கூறியதுபோல் இப்பொழுது எனக்கு இந்த மலைநாட்டைக் கொடு. ஏனெனில், அங்கே ஆனாக்கியர் இருக்கின்றனர். அவர்கள் அரண்சூழ்ந்த மாநகர்களில் வாழ்கின்றனர் என்று நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். ஆண்டவர் என்னோடு இருக்கக்கூடும். ஆண்டவர் கூறியபடி அவர்களைத் துரத்தியடிப்பேன்” என்றார்.


13யோசுவா எபுன்னேயின் மகன் காலேபுக்கு ஆசி வழங்கி எபிரோனை உடைமையாக அளித்தார். 14இந்நாள்வரை எபிரோன் கெனிசியனான எபுன்னேயின் மகன் காலேபின் உடைமையாக உள்ளது. ஏனெனில், அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினார். 15முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது. அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான். நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.


14:2 எண் 26:52-56; 34:13. 14:3 எண் 32:33; 34:14-15; இச 3:12-17. 14:6 எண் 14:30. 14:7 எண் 13:1-30. 14:9 எண் 14:24.



அதிகாரம் 15:1-63

யூதாவுக்கு அளிக்கப்பட்ட பகுதி


1யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லை சீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது. 2அவர்களது தென் எல்லை சாக்கடலின் தென்முனை வளைவிலிருந்து, 3தெற்குநோக்கி அக்கிரபிம் மேட்டைத்தாண்டி, சீன் பாலைநிலத்தைக் கடந்து, தெற்கே காதேசு பர்னேயாவை நோக்கி மேலே ஏறுகிறது. எஸ்ரோனைக் கடந்து அத்தார்வரை ஏறி கர்க்காவை நோக்கித் திரும்புகிறது; 4அட்சமோனைக் கடந்து, எகிப்தின் நதியைத் தொட்டுக் கடலுடன் முடிவடைகிறது. இதுவே உங்கள் தென் எல்லை. 5கிழக்கு எல்லை யோர்தானின் முகத்துவாரம் வரை உள்ள சாக்கடல்; வட எல்லை யோர்தானின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கி 6பெத்தொகிலா வரை மேலேறி, வடக்கே பெத்தராபா வரை செல்கிறது. இவ்வெல்லை தொடர்ந்து ரூபனின் மகன் போகனின் கல்வரை செல்கிறது. 7இவ்வெல்லை ஆக்கோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீர்வரை சென்று பள்ளத்தாக்கிற்குத் தெற்கே அதும்மிம் மேட்டுக்கு எதிரே உள்ள கில்காலுக்குப் பக்கமாக வடக்கே ஓடி, ஏன்செமசு நீர்நிலைகளைத் தொட்டு ஏன்ரோகேல்வரை செல்கிறது. 8மேலும், இவ்வெல்லை இன்னோம் மகன் பள்ளத்தாக்கின் வட எல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் வழியே சென்று எபூசியரின் தென் அரணாகிய எருசலேம் வழியாக மேற்கே இரபாயிம் பள்ளத்தாக்கின் வடஎல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் எதிரே உள்ள மலை உச்சிவரை செல்கிறது. 9மேலும், இவ்வெல்லை மலை உச்சியிலிருந்து நெப்தோவாகு நீரூற்றுவரை எபிரோன் மலை நகர்களுக்கு வெளியே செல்கிறது. பிறகு இவ்வெல்லை பாலாவுக்கு, அதாவது கிரியத்து எயாரிமுக்குச் செல்கிறது.10மேலும், இவ்வெல்லை பாலாவின் மேற்கே சேயிர் மலையை நோக்கிச் சுற்றுகிறது. எயாரிம் மலையின் வடக்குச் சரிவான கெசலோன் பக்கம் செல்கிறது. பெத்சமேசில் இறங்கி திம்னா பக்கம் செல்கிறது. 11பிறகு, இவ்வெல்லை எக்ரோனின் வடக்கிலுள்ள மலைச்சரிவில் சென்று சிக்ரோனைச் சுற்றுகிறது. பிறகு, பாலா மலையைக் கடந்து யாப்னவேலுக்குச் சென்று கடலில் முடிவடைகிறது. 12மேற்கு எல்லை பெருங்கடல். இவையே யூதா மக்களின் குடும்பங்களைச் சுற்றி அமைந்த எல்லைகள்.


காலேபு எபிரோனைக் கைப்பற்றல்


(நீத 1:11-15)



13யோசுவாவுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, எபுன்னேயின் மகன் காலேபுக்கு யோசுவா யூதாவின் நடுவில் எபிரோன் என்ற கிரியத்து அர்பா நிலப்பகுதியை அளித்தார், அர்பா என்பவன் ஆனாக்கின் தந்தை. 14சேசாய், அகிமான், தல்மாய் என்ற ஆனாக்கின் மூன்று புதல்வர்களை காலேபு அங்கிருந்து துரத்திவிட்டார். 15அங்கிருந்து அவர் தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றார். கிரியத்சேபர் என்பது தெபீரின் முன்னாளைய பெயர். 16“கிரியத்து சேபேரைத் தாக்கி அதைக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாகக் கொடுப்பேன்,” என்று காலேபு அறிவித்தார். 17காலேபின் சகோதரர் கெனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். காலேபு தம் மகள் அக்சாவை அவருக்கு மனைவியாகக் கொடுத்தார். 18அவள் வந்தபோது அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார். எனவே, அவள் கழுதை மேலிருந்து இறங்கியபொழுது காலேபு அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். 19அவள், “எனக்கு ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். நீர் எனக்கு வறண்ட நிலத்தைக் கொடுத்துள்ளீர். இப்பொழுது எனக்கு நீரூற்றுகளையும் தாரும்” என்றாள். அவர் அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.


யூதாவின் நகர்கள்


20இது யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களின் உரிமைச் சொத்து; 21தென்கோடியில் ஏதோம் எல்லையில் யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்கள் பின்வருமாறு; கப்சாவேல், ஏதேர், யாகூர்; 22கீனா, தீமோனா, அதாதா, 23கெதேசு, ஆட்சோர். இத்னான்; 24சீபு, தெலேம், பெயலோத்து; 25ஆட்சோர்—அதாத்தா, கெரியோத்து, எட்சரோன் என்னும் ஆட்சோர்; 26அமாம், சேமா, மோலதா; 27ஆட்சோர்—கத்தா, எஸ்மோன், பெத்பலேத்து 28அட்சர்சூவால், பெயேர்செபா, பிஸ்தோத்தியா;29பாலா, ஈயிம் எட்சேம், 30எல்தோலது, கெசீல், ஓர்மா; 31சிக்லாகு, மத்மன்னா, சன்சன்னா; 32இலபவோத்து, சில்கிம், அயின், ரிம்மோன்; ஆகிய இவை அனைத்தும் இருபத்தொன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.


33தாழ்வான நிலப்பகுதியில் எசுத்தாவோல், சோரா, அஸ்னா; 34சானோவாகு, ஏன்கன்னிம், தப்புவாகு, ஏனாம்; 35யார்முத்து, அதுல்லாம், சோக்கோ, அசேக்கா, 36சாராயிம், அதித்தாயிம், கேதரா, கெதரோத்தாயிம்; ஆகிய இவை பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.


37செனான், அதாசா, மிக்தல்-காத்து; 38திலயான், மிஸ்பே, யோக்தவேல்; 39 இலாக்கிசு, பொட்சகாது, எக்லோன்; 40கபோன், இலகுமாசு, கித்திலுசு; 41கெதேரோத்து, பெத்தாகோன், நாமா, மக்கேதா ஆகிய இவை பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 42லிப்னா, எத்தேர், ஆசான்; 43இப்தா, அஸ்னா, நெட்சிபு; 44கெயிலா, அக்சீபு, மாரேசா ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.


45எக்ரோன், அதன் நகர்களும் சிற்றூர்களும்; 46எக்ரோனிலிருந்து கடல்வரை, அஸ்தோது அருகில் உள்ள அனைத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்; 47அஸ்தோது, அதன் நகர்களும் சிற்றூர்களும்; எகிப்தின் ஆறுவரை பரவியுள்ள காசாவும் அதன் நகரங்களும் சிற்றூர்களும் பெருங்கடலே அதன் எல்லை.


48மலைப்பகுதியில் உள்ள சாமீர், யாத்திர், சோக்கோ; 49தன்னா, தெபீர் என்னும் கிரியத்துசன்னா; 50அனாபு, எஸ்தமோ, ஆனிம்; 51கோசேன், கோலோன், கீலோ ஆகிய இவை பதினொரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.


52அராபு, தூமா, எசான்; 53யானிம், பெத்தபுவாகு, அப்பேக்கா; 54உமற்றா, எபிரோன், கிரியத்து அர்பா, சீயோர் ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க


. 55மாவோன், கர்மேல், சீபு, யூற்றா; 56இஸ்ரியேல், யோக்தயாம், சானோவாகு; 57காயின், கிபயா, திம்னா ஆகிய இவை பத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க


. 58கல்குல், பெட்சூர், கெதோர், 59மாராத்து, பெத்தனோத்து, எல்டதக்கோன் ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.


60கிரியத்து எயாரிம் என்ற கிரியத்துபாகால், இரபா ஆகிய இவை இரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.


61பாலை நிலப்பகுதியில் பெத்தராபா, மிதின், செகாக்கா, 62நிப்சான், ஈர்மலாக்கு ஏன்கேதி ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.


63எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதா மக்கள் வெளியேற்ற இயலவில்லை. எபூசியர் யூதா மக்களுடன் இன்றும் வாழ்கின்றனர்.✠


15:13-14 நீத 1:20. 15:63 நீத 1:21; 2 சாமு 5:6; 1 குறி 11:4.



அதிகாரம் 16:1-10

எப்ராயிம், மனாசேக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்


1யோசேப்பின் மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: எரிகோ பகுதியின் யோர்தானிலிருந்து எரிகோ நீர் நிலைகளுக்குக் கிழக்காக, எரிகோவிலிருந்து பெத்தேல் குன்றுவரை உள்ள பாலைநிலத்தின் ஊடேசென்று, 2பெத்தேலிலிருந்து லூசுக்குச் சென்று அர்கியரின் எல்லையான அதாரோத்தைக் கடந்து, 3மேற்காக, யாப்லேற்றியரின் எல்லை நோக்கி இறங்கி, பெத்கோரோன் கெசேர் எல்லைமட்டும் சென்று கடலில் முடிகின்றது. 4யோசேப்பின் மக்களான மனாசேயும் எப்ராயிமும் இதை உரிமைச்சொத்தாகப் பெற்றனர்.


எப்ராயிமுக்குரிய பகுதி


5எப்ராயிம் புதல்வருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: கிழக்கே எல்லை அற்றரோத்து-அதார் முதல் மேல் பெத்கோரோன்வரை செல்கின்றது. 6மேற்கு எல்லை மிக்மெத்தாத்துக்கு வடக்கே சென்று கிழக்கே தானத்து சீலோவுக்குத் திரும்பி, அதை யானோவாவுக்குக் கிழக்காகக் கடந்து, 7யானோவாவிலிருந்து அற்றரோத்து நகருக்கு இறங்கி, எரிகோவைத் தொட்டு யோர்தானில் முடிவடைகின்றது. 8இவ்வெல்லை தப்பூவாகிலிருந்து மேற்காக கானா நதிவரை ஏறிக் கடலில் முடிவடைகின்றது. இதுவே எப்ராயிம் மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து. 9இதுவன்றி, எப்ராயிம் மக்களுக்கு மனாசேயின் மக்களின் உடைமைகளான நகர்களுக்கும் அவற்றின் சிற்றூர்களுக்கும் நடுவில் நகர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 10அவர்கள் கெசேரில் வாழ்ந்து வந்த கானானியரை வெளியேற்றவில்லை. ஆகையால் இன்றும் கானானியர் எப்ராயிம் நடுவில் அடிமைகளாக வேலைசெய்து வாழ்ந்து வருகின்றனர்.✠



அதிகாரம் 17:1-18

மனாசேக்குரிய மேற்குப்பகுதி


1யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்; மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன. 2மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள். இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்.


3மனாசேயின் மகனான மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் மகனாகிய ஏபேரின் புதல்வன் செலோபுகாதுக்கு ஆண்மக்கள் இல்லை; பெண்மக்கள் மட்டும் இருந்தனர். அவனுடைய பெண்மக்களின் பெயர்கள்; மக்லா, நோவா, ஒகுலா, மில்கா, தீரட்சா. 4அவர்கள் குரு எலயாசரையும், நூனின் மகன் யோசுவாவையும், தலைவர்களையும் அணுகி, “எங்கள் சகோதரர்கள் நடுவில் எங்களுக்கு உடைமைகள் அளிக்க ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். ஆண்டவரின் கட்டளைப்படி அவர்களுக்கு அவர்களுடைய தந்தையின் சகோதரர்களின் நடுவில் உரிமைச்சொத்து அளித்தார்.✠ 5யோர்தானுக்கு அப்பால் உள்ள கிலயாது, பாசான் நிலம் தவிர மனாசேக்குப் பத்துப் பங்குகள் விழுந்தன. 6ஏனெனில், மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுடன் சொத்துரிமை பெற்றனர். கிலயாது நாடு மனாசேயின் ஏனைய புதல்வருக்குக் கிடைத்தது.


7மனாசேயின் எல்லை ஆசேரிலிருந்து செக்கேமின் எதிரில் உள்ள மிக்மத்தாத்துவரை செல்கின்றது. அவ்வெல்லை தென் பக்கமாக ஏன் தப்புவாகு பகுதியில் வாழ்கின்ற மக்களையும் உள்ளடக்கியது. 8தப்புவாகு நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமாயிற்று. மனாசேயின் எல்லையில் இருந்த தப்புவாகு நகர் எப்ராயிமின் மக்களுக்குச் சொந்தமானது. 9இவ்வெல்லை கானா நதியை நோக்கி இறங்குகின்றது. நதிக்குத் தென்புறமாக உள்ள இந்நகர்கள் எபிராயிமுக்குச் சொந்தமானவை. இவை மனாசேயின் நகர்களுக்கு நடுவில் உள்ளன. மனாசேயின் எல்லை ஓடைக்கு வடக்கில் உள்ளது. அது கடலில் முடிவடைகிறது. 10எப்ராயிமின் பகுதிக்குத் தெற்காகவும், மனாசேயின் பகுதிக்கு வடக்காகவும் கடல் அதன் எல்லையாக இருந்தது. அவை வடக்கில் ஆசேருக்கு உரிய எல்லையையும், கிழக்கில் இசக்காருக்கு உரிய எல்லையையும் தொட்டன. 11இசக்கார், ஆசேர் எல்லைகளுக்குள் பெத்சானும் அதன் ஊர்களும், இப்லயாமும் அதன் ஊர்களும், தோரின் குடிமக்களும் அதன் ஊர்களும், ஏன்தோரின் குடிமக்களும், அதன் ஊர்களும், தானாக்கின் குடிமக்களும் அதன் ஊர்களும், மெகிதோவின் குடிமக்களும் அதன் ஊர்களும் மனாசேக்கு உரிமையாக்கப்பட்டன. 12மனாசேயின் மக்களால் இந்நகர்களைக் கைப்பற்ற முடியவில்லை. கானானியர் அப்பகுதியிலேயே உறுதியுடன் தங்கிவிட்டனர். 13இஸ்ரயேலரின் புதல்வர் வலிமை பெற்றவுடன் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அடிமை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர்.


எப்ராயிம், மனாசே அதிக நிலம் கேட்டல்


14யோசேப்பின் புதல்வர் யோசுவாவிடம், “ஏன் எங்களுக்கு உரிமைச் சொத்தாக ஒரே ஒரு பங்கு அளித்தீர்? எங்கள் மக்கள் பெருந்தொகையினர். ஆண்டவர் எங்களுக்கு இத்துணை ஆசி வழங்கியுள்ளார்!” என்றனர். 15யோசுவா அவர்களிடம், “நீங்கள் திரளான மக்களாக இருப்பதால் பெரிசியர், இரபாயிம் ஆகியோரின் காட்டு நிலத்திற்குப் போய் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். எப்ராயிம் மலைப்பகுதியோ உங்களுக்கு மிகவும் குறுகலானது” என்றார். 16யோசேப்பின் மக்கள், “மலைப்பகுதி எங்களுக்குப் போதாது. மேலும், சமவெளியில் இருக்கும் பெத்சானிலும் அதன் ஊர்களிலும், மற்றும் இஸ்ரியேல் சமவெளியிலும் வாழும் கானானியர் அனைவரிடமும் இரும்புத் தேர்கள் இருக்கின்றன” என்றனர். 17யோசுவா யோசேப்பின் வீட்டாரான எப்ராயிமிடமும் மனாசேயிடமும், “நீங்கள் திரளான மக்கள். வலிமை மிக்கவர்கள். உங்களுக்கு ஒரு பங்கு மட்டும் இல்லை.18மலைப்பகுதியும் உங்களுடையதே. அது காட்டுப் பகுதியாக இருப்பதால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். அதன் எல்லை அனைத்தும் உங்களுக்குச் சொந்தம். ஏனெனில், கானானியருக்கு இரும்புத் தேர்கள் இருந்தாலும், அவர்கள் வலிமையுள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களை விரட்டுவீர்கள்” என்றார்.


17:4 எண் 27:1-7. 17:12-13 நீத 1:27-28.



அதிகாரம் 18:1-28

எஞ்சிய நிலத்தைப் பங்கிடல்


1இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதும் சீலோவில் ஒன்று கூடியது. அங்குச் சந்திப்பு கூடாரத்தை அமைத்தனர். ஏற்கெனவே அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியிருந்தனர்.


2இஸ்ரயேல் மக்களில் ஏழு குலங்களுக்கு அவர்களுடைய உரிமைச் சொத்துப் பிரித்துத் தரப்படவில்லை. 3இஸ்ரயேல் மக்களிடம் யோசுவா, “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு காலம் சோம்பேறிகளாக இருப்பீர்கள்? 4குலத்திற்கு மும்மூன்று பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நான் அனுப்ப, அவர்கள் புறப்பட்டு, நாடெங்கும் சுற்றிச் சென்று அவரவர் உரிமைச்சொத்து இன்னதென்று வரைந்து, என்னிடம் கொண்டு வருவார்கள். 5அவர்கள் நாட்டை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர். யூதா தெற்கில் தங்கள் எல்லையில் தங்கியிருப்பர். யோசேப்பின் வீட்டார் வடக்கில் அதன் எல்லையில் தொடர்ந்து தங்கியிருப்பர். 6நீங்கள் நிலத்தை ஏழு பிரிவுகளாக வரைந்து என்னிடம் கொண்டு வருவீர்கள். நான் இங்கு உங்களுக்குக் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் திருவுளச்சீட்டுப் போடுவேன். 7லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில், ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து” என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.


8அவ்வாறே அம்மனிதர் புறப்பட்டுச் சென்றனர். நிலத்தை வரையுமாறு செல்பவர்களுக்கு யோசுவா கட்டளையிட்டுக் கூறியது: “சென்று, நிலத்தைச் சுற்றிப்பார்த்து வரைந்து கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு ஆண்டவர் முன்னிலையில் சீலோவில் திருவுளச்சீட்டுப் போடுவேன்”. 9அம்மனிதர் சென்று நிலத்தைச் சுற்றிப் பார்த்தனர். நகர்களின் பட்டியலை ஏழு தொகுதிகளாகப் புத்தகத்தில் எழுதினர். சீலோவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர். 10யோசுவா சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் அவர்களுக்குத் திருவுளச்சீட்டுப் போட்டார். அங்கே யோசுவா இஸ்ரயேல் மக்களுக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நிலத்தைப் பங்கிட்டார்.


பென்யமினுக்கு அளிக்கப்பட்ட பகுதி


11முதல் சீட்டு பென்யமின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது எல்லை யூதா மக்களுக்கும் யோசேப்பின் மக்களுக்கும் இடையில் விழுந்தது. 12அவர்களது எல்லை வடக்குப் பகுதியில் யோர்தானிலிருந்து தொடங்கிப் பின்னர் எரிகோவில் வட சரிவில் ஏறி, பிறகு மேற்கில் மலைப்பக்கம் சென்று பெத்சாவேன் பாலைநிலத்தில் முடிவடைகிறது. 13மீண்டும் அவ்வெல்லை அங்கிருந்து தெற்குப்பக்கமாகப் பெத்தேல் என்னும் லூசின் சரிவை நோக்கிச் சென்று அதனைக் கடக்கிறது. பின்னர், அவ்வெல்லை கீழ் பெத்கோரோனுக்குத் தெற்கே மலைமீது உள்ள அத்தராத்து அதாரை நோக்கிச் செல்கிறது. 14பின்பு, அவ்வெல்லை மேற்கு முகமாகத் திரும்பி அங்குள்ள மலைக்குத் தெற்காக பெத்கோரோனுக்கு எதிராக யூதா மக்களுக்குரிய கிரியத்துஎயாரிம் எனப்படும் கிரியத்துபாகாலில் முடிவடைகிறது. இதுவே மேற்கு எல்லை. 15அதன் தென் எல்லை கிரியத்து எயாரிமின் எல்லைப்புறத்தில் தொடங்கி மேற்காகச் சென்று, பிறகு நெப்தோவாகு நீர்நிலைகள்வரை போகிறது. 16மேலும், அவ்வெல்லை இரபாயிம் பள்ளத்தாக்கின் வடகோடியில் உள்ள இன்னோம் மகனின் பள்ளத்தாக்கை நோக்கி நிற்கும் மலைவரை செல்கிறது. பின்னர், அது எபூசியரின் மலைச்சரிவிற்குத் தெற்கேயுள்ள இன்னோம் பள்ளத்தாக்கை நோக்கி ஏன்ரோகேல் பக்கமாக இறங்குகிறது. 17பிறகு, அது வட பக்கம் திரும்பி அதும்மிம் மேட்டுக்கு எதிரில் உள்ள கெலிலோத்துப் பக்கம் திரும்பி ரூபனின் மகன் போகனின் கல் பக்கம் செல்கிறது. 18பிறகு, அது வடக்கே மலைச்சரிவில் அராபாவின் எதிராகச் சென்று அராபாவில் இறங்குகிறது. 19பிறகு, அது பெத்தொகிலாவின் வடசரிவைக் கடந்து உப்புக் கடலின் வடக்கு வளைவில் யோர்தானின் தென்பகுதியில் முடிவடைகிறது. இதுவே தென் எல்லை. 20கிழக்கே யோர்தான் நதி எல்லையாக அமைந்துள்ளது. இது பென்யமின் மக்களின் குடும்பங்களுக்கு கிடைத்த, சுற்றிலும் எல்லையிடப்பட்ட உரிமைச் சொத்து.


21பென்யமின் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி உடைமையான நகர்கள்; எரிக்கோ, பெத்தொகிலா, ஏமக்கசீசு 22பெத்தராபா, செமாரயிம், பெத்தேல், 23அவ்விம், பாரா, ஒபிரா, 24கெபரம்மோனி, ஒப்னி, கேபா ஆகிய பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 25கிபயோன், இராமா, பெயரோத்து, 26மிஸ்பே, கெப்பிரா, மோசா, 27இரக்கேம், இரிப்பயேல், தராலா, 28சேலா, எலேபு, எருசலேம் என்னும் எபூசி, கிபயத்து, கிரியத்து ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. இது பென்யமின் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின்படிக் கிடைத்த உடைமை.



அதிகாரம் 19:1-51

சிமியோனுக்கு அளிக்கப்பட்ட பகுதி


1இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது. 2அவர்களுக்கு உடைமையான நகர்கள்; பேயேர்செபா, சேபா, மோலாதா, 3அட்சர்சூவால், பாலா எட்சேம், 4எல்தோலகு, பெத்தூல், ஓர்மா, 5சிக்லாகு, பெத்மர்க்கபோத்து, அட்சர்சூசா, 6பெத்லாபாவோத்து, சாருகன் ஆக பதின்மூன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 7அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 8இவைகளன்றித் தெற்கே இராமாது எனப்படும் பாகலாத்பெயேர்வரை உள்ள நகர்களும் அவற்றின் சிற்றூர்கள் அனைத்தும். இதுவே சிமியோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து. 9சிமியோன் மக்களின் உரிமைச்சொத்து யூதா மக்களுக்குரிய பங்கில் ஒரு பகுதி. யூதா மக்களுக்கு ஏராளமான உடைமை இருந்தது. அவர்களின் உரிமைச் சொத்தின் நடுவில் சிமியோனின் மக்கள் உரிமைச் சொத்தைப் பெற்றனர்.


செபுலோனுக்கு அளிக்கப்பட்ட பகுதி


10மூன்றாவது சீட்டு செபுலோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்கள் உடைமையின் எல்லை சாரீதுவரை சென்றது. 11அவர்களது எல்லை மேற்கே மரியலாவுக்கு ஏறி, தபா சேத்துக்கு வந்து யோக்னயாமுக்கு எதிரில் உள்ள ஓடையைத் தொடுகின்றது. 12சாரீதிலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்து தாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது. 13அங்கிருந்து கிழக்காகக் காத்கேப்பேரையும் இத்தகாச்சினையும் ரிம்மோனையும் கடந்து சென்று நேயா பக்கம் வளைகிறது. 14ப்தாவேல் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது.15கற்றாத்து, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் ஆக பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 16இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களுமே செபுலோன் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச்சொத்து.


இசக்காருக்கு அளிக்கப்பட்ட பகுதி


17நான்காவது சீட்டு இசக்காரின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 18அவர்களது எல்லை; இஸ்ரியேல், கெசுல்லோத்து, சூனேம், 19அப்பாராயிம், சியோன், அனகராத்து, 20இரப்பீத்து, கிசியோன், எபெசு, 21இரமேத்து, ஏன்கன்னிம், ஏன்கத்தா, பெத்-பசேசு என்பவையே. 22அவ்வெல்லை தாபோரையும் சகட்சிமாவையும் பெத்சமேசையும் தொட்டு, யோர்தானில் முடிவடைகின்றது. ஆக, பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 23இவை இசக்கார் மக்களின் குலத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.


ஆசேருக்கு அளிக்கப்பட்ட பகுதி


24ஐந்தாவது சீட்டு ஆசேர் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 25அவர்களின் எல்லை; எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு, 26அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை. மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு, 27கிழக்குப் பக்கம் திரும்பி, பெத்தாகோன் சென்று செபுலுன், இப்தாவேல் பள்ளத்தாக்கையும், பெத்தேமக்கு நெகியேலுக்கு வடக்காகத் தொட்டு, காபூலில் இடப்பக்கம் திரும்புகின்றது. 28எபிரோன், இரகோபு, அம்மோன், தானா, பெரிய சீதோன்வரை சென்று, 29பிறகு இராமா பக்கம் திரும்புகின்றது. அரண்சூழ் நகரான தீர் வரை சென்று, கோசா பக்கம் திரும்பிக் கடலில் முடிவடைகிறது. மேகேபல், அக்சீபை ஒட்டிய கடலில் முடிவடைகிறது. 30உம்மா, அபேக்கு, இரகோபு, ஆக இருபத்திரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 31இவையே ஆசேர் மக்கள் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்தாகிய நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.


நப்தலிக்கு அளிக்கப்பட்ட பகுதி


32ஆறாவது சீட்டு நப்தலியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 33அவர்களது எல்லை ஏலப்பிலிருந்து சானான்னிமிலுள்ள கருவாலி மரத்திலிருந்து, அதாமி நெகேபு, யப்னவேல், இலக்கம்வரை சென்று யோர்தானில் முடிகின்றது. 34பிறகு, அவ்வெல்லை மேற்கில் அசனோத்துதாபோர் பக்கம் திரும்புகின்றது; அங்கிருந்து உக்கோகில் வெளியேறுகின்றது. தெற்கில் செபுலோனையும், மேற்கில் ஆசேரையும் கிழக்கில் யோர்தானையும் எல்லையாகக் கொண்டுள்ளது. 35அரண்சூழ் நகர்கள்; சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து, 36அதாமா, இராமா, ஆட்சோர், 37கெதேசு, எதிரேயி, ஏன் ஆட்சோர், 38ஈரோன், மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு, ஆக பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 39இவை நப்தலியின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.


தாணுக்கு அளிக்கப்பட்ட பகுதி


40ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 41அவர்களது உரிமைச் சொத்தின் எல்லை; சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு 42சாயலாபிம், அய்யலோன், இதிலா, 43ஏலோன், திமினா, எக்ரோன், 44எல்தெக்கே, கிபதோன், பாகலாத்து, 45எகூது, பெனபராக்கு, காத்ரிம்மோன், 46மேயர்க்கோன், இரக்கோன் ஆகிய இந்நகர்களும் யோப்பாவுக்கு எதிரே எல்லைப் பகுதியும். 47தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்; அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் ‘தாண்’ என்று பெயரிட்டார்கள்.✠ 48இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.49நாட்டுக்கு எல்லை வகுத்து அவரவர்களுக்கு உரிமைச்சொத்து பிரித்துக் கொடுத்தபின், நூனின் மகன் யோசுவாவுக்கு இஸ்ரயேல் மக்கள் தங்கள் நடுவில் உரிமைச்சொத்து அளித்தனர். 50எப்ராயிம் மலைநாட்டில் அவர் கேட்ட நகரான திம்னத்செராவை ஆண்டவரின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தனர். அவர் அந்நகரைக் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தார். 51இவ்வாறு, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் குலங்களின் முதுபெரும் தலைவர்கள் ஆகியோர் இவற்றை இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களுக்கு உரிமைச் சொத்தாகச் சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலில் திருவுளச்சீட்டுப் போட்டு உரிமையாக்கி, நாட்டின் பங்கீட்டுப் பணியை நிறைவு செய்தனர்.


19:2-8 1 குறி 4:28-33. 19:47 நீத 18:27-29.



அதிகாரம் 20:1-9

அடைக்கல நகர்கள்


1ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 2“இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி, ‛அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்’ என்று கூறுவாய். 3அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும். 4கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார். அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர். 5Lல் ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் அறியாமல்தான் மற்றவரைக் கொன்றுவிட்டார். இதற்கு முன் கொலையாளி அவரை வெறுத்ததில்லை. 6கொலையாளி தீர்ப்புக்காக அவையின் முன் நிற்கும்வரை, அந்நாள் தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்நகரில் தங்குவார். அதன்பின் கொலையாளி தம் நகருக்கு – எந்த நகரிலிருந்து ஓடி வந்திருந்தாரோ, அந்த நகருக்கு – தம் வீட்டுக்குச் செல்வார்.” 7தேர்ந்துகொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள்: நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம் மலைநாட்டில் செக்கேம்; யூதா மலைநாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா; 8யோர்தானுக்கு அப்பால் எரிகோவுக்குக் கிழக்காக ரூபனின் குலத்திற்குரிய பாலைநிலச் சமவெளியில் பெட்சேர்; காத்து குலத்திற்குரிய கிலயாதில் இராமோத்து; மனாசேயின் குலத்திற்குரிய பாசானில் கோலான்; 9இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின. அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார். மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை


20:1-9 எண் 35:6:32; இச 4:41-43; 19:1-13.



அதிகாரம் 21:1-45

லேவியர்க்குரிய நகர்கள்


1லேவியரின் முதுபெரும் தலைவர்கள், குரு எலயாசரையும் நூனின் மகன் யோசுவாவையும், இஸ்ரயேல் மக்கள் குலங்களின் முதுபெரும் தலைவர்களையும் அணுகி, 2கானான் நாட்டில் சீலோவில் கூறியது: “நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார்.”✠ 3இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் கட்டளைப்படி தங்கள் பங்கிலிருந்து லேவியருக்குப் பின்வருமாறு நகர்களையும் நிலங்களையும் கொடுத்தனர்.


4கோகாத்தியரின் குடும்பங்களுக்காகச் சீட்டுப் போட்டனர். லேவியருள் குரு ஆரோனின் மக்களுக்கு, யூதா குலத்திலிருந்தும் சிமியோன் குலத்திலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.


5கோகாத்தியரில் ஏனைய மக்களுக்கு, எப்ராயிம் குலத்தின் குடும்பத்திலிருந்தும் தாண் குலத்திலிருந்தும் மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பத்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.


6கேர்சோன் மக்களுக்கு இசக்கார் குலத்தின் குடும்பங்களிலிருந்தும் ஆசேர் குலத்திலிருந்தும் நப்தலி குலத்திலிருந்தும் பாசானிலிருந்த மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.


7மெராரியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் குலத்திலிருந்தும் காத்துக் குலத்திலிருந்தும் செபுலோன் குலத்திலிருந்தும் பன்னிரு நகர்கள் கிடைத்தன.


8ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி, சீட்டுப் போட்டு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு இந்நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் அளித்தனர்.


9யூதா மக்களின் குலத்திலிருந்தும் சிமியோன் மக்களின் குலத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நகர்களின் பெயர்ப்பட்டியல்; 10லேவியரின் மக்கள் கோகாத்தியரின் குடும்பத்தைச் சார்ந்த ஆரோனின் மக்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் அவர்களுக்குப் பின்வருமாறு நகர்கள் கிடைத்தன. 11யூதா மலைநாட்டில் உள்ள எபிரோன் என்னும் கிரியத்து அர்பாவைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலம் அவர்களுக்குக் கிடைத்தது. அர்பா ஆனாக்கின் தந்தை. 12நகரின் விளைநிலமும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு உடைமையாகக் கிடைத்தன.


13குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான எபிரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; லிப்னா, அதன் மேய்ச்சல் நிலங்கள்; 14யாத்திர், அதன் மேய்ச்சல் நிலம்; எசுத்தமோவா, அதன் மேய்ச்சல் நிலம்; 15கோலோன், அதன் மேய்ச்சல் நிலம்; தெபீர், அதன் மேய்ச்சல் நிலம்; 16அயின், அதன் மேய்ச்சல் நிலம்; யுற்றா, அதன் மேய்ச்சல் நிலம்; பெத்சமேசு அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இவ்விரு குலங்களினின்று ஒன்பது நகர்கள். 17பென்யமின் குலத்திலிருந்து கொடுக்கப்பட்டவை; கிபயோன், அதன் மேய்ச்சல் நிலம்; கேபா, அதன் மேய்ச்சல் நிலம்; 18அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; அல்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள். 19குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை மொத்தம் பதின் மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.


20லேவியரைச் சார்ந்த கோகாத்தின் ஏனைய குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் உடைமைகளிலிருந்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கொடுக்கப்பட்டன. 21அவர்களுக்குக் கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான எப்ராயிம்; மலையில் அமைந்துள்ள செக்கெம் நகர், அதன் மேய்ச்சல் நிலம்; கேசேர், அதன் மேய்ச்சல் நிலம்22கிபட்சயிம், அதன் மேய்ச்சல் நிலம், பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள். 23தாணின் குலத்திலிருந்து கிடைத்தவை; எல்தக்கே, அதன் மேய்ச்சல் நிலம்; கிபத்தோன், அதன் மேய்ச்சல் நிலம்; 24அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள். 25மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை; தானாக்கு, அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள். 26இவ்வாறு, கோகாத்தின் எஞ்சிய குடும்பங்களுக்குப் பத்து நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.


27லேவியரின் குடும்பத்தைச் சார்ந்த கேர்சோனின் குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான பாசானில் கோலான், அதன் மேய்ச்சல் நிலம்; பெயசுதரா, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள். 28இசக்காரின் குலத்திலிருந்து கிடைத்தவை; கிசியோன், அதன் மேய்ச்சல் நிலம்; தாபராத்து, அதன் மேய்ச்சல் நிலம்; 29யார்முத்து, அதன் மேய்ச்சல் நிலம்; ஏன்கன்னிம், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள். 30ஆசேரின் குலத்திலிருந்து கிடைத்தவை; மிசால், அதன் மேய்ச்சல் நிலம்; அப்தோன், அதன் மேய்ச்சல் நிலம், 31எல்காத்து, அதன் மேய்ச்சல் நிலம்; இரகோபு, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள். 32நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான கலிலேயாவின் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலம்; அம்மோத்தோர், அதன் மேய்ச்சல் நிலம்; காத்தான், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக மூன்று நகர்கள். 33இவ்வாறு, கேர்சோனின் குடும்பங்களுக்குக் கிடைத்தவை இப் பதின்மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.


34எஞ்சிய லேவியருள் மெராரி மக்களின் குடும்பத்தினருக்கு செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை; யோக்னயாம், அதன் மேய்ச்சல் நிலம்; கர்த்தா, அதன் மேய்ச்சல் நிலம். 35திம்னா, அதன் மேய்ச்சல் நிலம்; நகலால், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள். 36ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை; பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலம்; யாகசு, அதன் மேய்ச்சல் நிலம்; 37கெதமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள். 38காத்துக் குலத்திலிருந்து கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான கிலயாத்து ராமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலம்; 39எஸ்போன், அதன் மேய்ச்சல் நிலம்; யாசேர், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.40இவ்வாறு, எஞ்சிய லேவியருள் மெராரி குடும்பங்களுக்குச் சீட்டு விழுந்ததன்படி கிடைத்த மொத்த நகர்கள் பன்னிரண்டு. 41இஸ்ரயேல் மக்களுக்குரிய நிலப்பகுதியில் லேவியருக்கு ஆங்காங்கே விடப்பட்டவை நாற்பத்தெட்டு நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும். 42எல்லா நகர்களைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. 43இவ்வாறு, ஆண்டவர் அவர்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாடு முழுவதையும் இஸ்ரயேலுக்குக் கொடுத்தார். அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்தார்கள். 44அவர்கள் மூதாதையருக்கு வாக்களித்தபடி ஆண்டவர் அவர்களுக்கு நாட்டின் எல்லை எங்கும் அமைதி நிலவச் செய்தார். பகைவர்களில் எவனாலும் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. கடவுள் அவர்களுடைய பகைவர்களை அவர்கள் கையில் ஒப்படைத்தார். 45ஆண்டவர் இஸ்ரயேல் வீட்டாருக்கு உரைத்த எல்லா நல்வாக்குகளும் தவறாமல் நிறைவேறின.


21:2 எண் 35:1-8.



அதிகாரம் 22:1-34abcd
அதிகாரம் 23:1-16

யோசுவாவின் இறுதிமொழிகள்


1ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகள் அனைவரிடமிருந்தும் அமைதி அளித்த பல நாள்களுக்குப்பின், யோசுவா மிகவும் வயதாகி முதுமை எய்தினார். 2யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும், அவர்களுடைய முதியோர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நான் வயதாகி முதுமை எய்திவிட்டேன். 3உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை முன்னிட்டு வேற்றினத்தாருக்குச் செய்த அனைத்தையும் கண்டீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிட்டார்.4பாருங்கள்! யோர்தானிலிருந்து மேற்கே பெருங்கடல்வரை நான் சிதறடித்த எல்லா நாடுகளையும் மீதியிருக்கின்ற நாடுகளையும் உங்கள் குலங்களுக்கு உரிமையாகக் கொடுத்துள்ளேன். 5உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவர்களைத் துரத்தி வெளியேற்றுவார். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கூறியபடி, அவர்கள் நிலங்களை உங்கள் உடைமைகளாக்கிக் கொள்வீர்கள். 6மோசேயின் திருச்சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கைக்கொள்வதில் கவனமாயிருங்கள். அதனின்று வலப்புறமோ இடப்புறமோ விலகாதபடி உறுதிகொண்டிருங்கள். 7உங்கள் நடுவில் எஞ்சியிருக்கும் இந்த வேற்றினத்தாருடன் சேராதிருங்கள். அவர்களுடைய தெய்வங்களின் பெயரைச் சொல்லாமலும், அவற்றின்மீது ஆணையிடாமலும், அவற்றுக்கு ஊழியம் செய்யாமலும், அவற்றை வணங்காமலும் இருப்பதில் உறுதியாக இருங்கள். 8இந்நாள் வரை நீங்கள் செய்ததுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள். 9ஆண்டவர் மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்த வேற்றினங்களை உங்கள் முன்னிருந்து விரட்டினார். இந்நாள்வரை எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலவில்லை.


10உங்களுள் ஒரே மனிதன் ஆயிரம் பேரை வெல்வான். ஏனெனில், தம் வாக்குறுதிக்கிணங்க உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்.✠ 11உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்புகூர்வதில் மட்டும் கருத்தாயிருங்கள். 12மாறாக, நீங்கள் வழிவிலகி இங்கு எஞ்சியுள்ள வேற்றினத்தாருடன் சேர்ந்துகொண்டு அவர்களுடன் கலப்புமணம் செய்து கொண்டால், 13உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவ்வேற்றினத்தவரைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டிருக்கமாட்டார் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையிலும் அவர்கள் உங்களுக்கு வலைப்பொறியாகவும் கண்ணிகளாகவும், உங்கள் பக்கங்களில் தொல்லையாகவும், உங்கள் கண்களில் முற்களாகவும் இருப்பார்கள்.


14னும் செல்லவிருக்கிறேன். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளிலும் ஒன்றுகூடத் தவறவில்லை என்பதை உங்கள் முழு இதயத்துடனும் முழு உள்ளத்துடனும் அறிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்களுக்கு நிறைவேறின; ஒன்றுகூடத் தவறவில்லை. 15உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளும், உங்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோலவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்கு அளித்த இந்த நல்ல நிலத்திலிருந்து உங்களை அழிக்கும்வரை உங்கள்மீது ஆண்டவர் எல்லாத் தீமைகளையும் விழச்செய்வார். 16உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறி, நீங்கள் சென்று வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால் ஆண்டவரின் சினம் உங்களுக்கெதிராகப் பற்றி எரியும். அவர் உங்களுக்கு அளித்த நல்ல நிலத்திலிருந்து விரைவில் அழிந்து போவீர்கள்.


23:10 இச 3:22; 32:30.



அதிகாரம் 24:1-33

செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல்


1செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். 2யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: ‘முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.✠ 3உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை நதிக்கு அப்பாலிருந்து அழைத்து வந்து. கானான் நாடு முழுவதிலும் நடத்திச் சென்றேன்; அவனது வழிமரபைப் பெருக்கினேன்; அவனுக்கு ஈசாக்கை அளித்தேன்.✠ 4ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும் அளித்தேன்; ஏசாவுக்குச் செபீர் மலையை உடைமையாக அளித்தேன். யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர்.✠ 5மோசேயையும் ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன். பின்னர், உங்களை வெளியே கொணர்ந்தேன்.✠ 6உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன். அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். எகிப்தியர் தேரில் குதிரைகளுடன் செங்கடலுக்குள் உங்கள் தந்தையரைத் துரத்திச் சென்றனர். 7அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள். 8யோர்தானுக்குக் கிழக்கில் வாழும் எமோரியரின் நாட்டுக்கு உங்களைக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுடன் போரிட்டார்கள். நான் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தேன். அவர்களது நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக்கொண்டீர்கள். உங்கள் முன்னிருந்து அவர்களை அழித்து ஒழித்தேன்.✠ 9மோவாபின் அரசன் சிப்போரின் மகன் பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் படை திரட்டிப் போர் தொடுத்தான். உங்களைச் சபிக்குமாறு பேகோரின் மகன் பிலயாமை அழைக்க ஆளனுப்பினான். 10நான் பிலயாமுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை. அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான். உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன். 11நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.✠ 12நான் உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்பினேன். அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய அரசர்களை விரட்டின. இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று; உங்கள் அம்பாலும் அன்று.✠ 13நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீகள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே."✠


14இப்பொழுது, ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள். 15ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால், நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.


16மக்கள் மறுமொழியாக, “ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! 17ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். 18ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே எங்கள் கடவுள்” என்றனர்.


19யோசுவா மக்களிடம், “உங்களால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது. ஏனெனில், அவர் தூய கடவுள். அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். உங்கள் குற்றங்களையும் பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார். 20நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் அவர் மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார். உங்களுக்கு நன்மை செய்த அவர் உங்களை அழித்து விடுவார்” என்றார். 21மக்கள் யோசுவாவிடம், “இல்லை, நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்” என்றனர். 22யோசுவா மக்களிடம், “ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அவரை நீங்களே தெரிந்து கொண்டீர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகள்” என்றார். அவர்கள், “நாங்களே சாட்சிகள்” என்றனர். 23“இப்பொழுது உங்கள் நடுவில் உள்ள வேற்றுத் தெய்வங்களை விலக்கி விடுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம் உங்கள் இதயங்களைத் திருப்புங்கள்” என்றார். 24மக்கள் யோசுவாவிடம்,“எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்” என்றனர். 25அன்று யோசுவா மக்களுக்காக உடன்படிக்கை செய்தார். செக்கேமில் அவர் அவர்களுக்கு விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொடுத்தார். 26யோசுவா இவ்வார்த்தைகளைக் கடவுளின் திருச்சட்டநூலில் எழுதினார். ஒரு பெரும் கல்லை எடுத்து அதை ஆண்டவரின் திருத்தலத்தில் ஒரு கருவாலி மரத்தின் கீழ் நாட்டினார். 27யோசுவா எல்லா மக்களிடமும், “இதோ! இக்கல் நமக்கு எதிரான சான்றாக இருக்கும். ஏனெனில், ஆண்டவர் நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்” என்றார். 28யோசுவா மக்களை அவரவர் உரிமைச் சொத்தாகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.


யோசுவா, எலயாசர் இறப்பு


29இந்நிகழ்ச்சிக்குப்பின் நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப்பத்து. 30அவரை அவரது உரிமை நிலத்தின் எல்லையில் இருந்த திம்னத்செரா என்ற இடத்தில் அடக்கம் செய்தனர். இது எப்ராயிம் மலைநாட்டில் காகசு மலைக்கு வடக்கே உள்ளது.✠ 31யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும், யோசுவாவுக்குப்பின் வாழ்ந்த முதியோர்களின் நாள்களிலும் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்தையும் அம்முதியோர் அறிந்திருந்தனர்.32இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளைச் செக்கேமில் ஒரு நிலப்பகுதியில் புதைத்தனர். இப்பகுதி யாக்கோபு செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் மக்களிடமிருந்து நூறு வெள்ளிக் காசுக்கு வாங்கியது. யோசேப்பின் மக்களுக்கு இது உரிமையாயிற்று.✠ 33பின்னர், ஆரோனின் மகன் எலயாசர் இறந்தார். அவருடைய மகன் பினகாசுக்கு எப்ராயிம் மலைநாட்டில் கொடுக்கப்பட்ட கிபயாவில் அவரை அடக்கம் செய்தனர்.


24:2 தொநூ 11:27. 24:3 தொநூ 12:1-9; 21:1-3. 24:4 தொநூ 25:24-26; 36:8; 46:1-7; இச 2:5. 24:5 விப 3:1-12:42. 24:6-7 விப 14:1-31. 24:8 எண் 21:21-35. 24:9-10 எண் 22:1; 24:25. 24:11 யோசு 3:14-17; 6:1-21. 24:12 விப 23:28; இச 7:20. 24:13 இச 6:10-11. 24:30 யோசு 19:49-50. 24:32 தொநூ 33:19; 50:24-25; விப 13:19; யோவா 4:5; திப 7:16.