Basic Prayer

  • 1. சிலுவை அடையாளம்

    தந்தை / மகன் / தூய ஆவியாரின் பெயராலே. / ஆமென்.

  • 2. மூவொரு இறைவன் புகழ்

    தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் / மாட்சிமை உண்டாகுக. / தொடக்கத்தில் இருந்ததுபோல / இப்பொழுதும் எப்பொழுதும் / என்றென்றும் இருப்பதாக. / ஆமென்.

  • 3. கிறிஸ்து கற்பித்த செபம்

    விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

  • 4. மங்கள வார்த்தை செபம்

    அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.